திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
31de5bf6-0a06-4bf3-ab9b-83894683832a
-
multi-img1 of 2

வடிவேல்: நடித்தது போலவே நடக்கிறது

கொரோனாவால் மக்கள் பட்டு வரும் அவதி குறித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு காெணாளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனாவால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. வெளியே போகக்கூடாது. யாரையும் தொட்டுப் பேசக் கூடாது. கை கொடுக்கக் கூடாது என்கின்றனர்.

என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்கப் போகி றீர்கள் என்று கேட்டார். "இப்போது நடிக்கவும் படம் எடுக்கவும் யாரும் தயாராக இல்லை. அதுபோல், படத்தை பார்க்க வரவும் யாரும் தயாராக இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாகப் போய் நடிப்பது. இறைவன் வெளியீடு செய்துள்ள 'கொரோனா' படத்தை அவன் எப்போது தூக்குவானோ அப்போதுதான் எல்லோரும் வெளியே வரமுடியும்," என்றேன். அவர் சிரித்துக்கொண்டார்.

"ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால் விட்டு நடித்திருந்தேன். அதை வெறும் படமாகத்தான் செய்தேன். ஆனால், உண்மையிலேயே அது எவ்வளவு சிரமம் என்பதை இறைவன் இப்போது உணர வைத்துள்ளான். யாரும் பயப்படாதீர்கள். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வெல்வோம்,'' என்று கூறியுள்ளார்.

ரஜினிக்கான கதைகள் விஜய் பக்கம்

ரஜினிக்கு வயது 70 ஆகும் நிலையில், அவரது உடலும் தளர்ந்து போயுள்ளதால் முன்புபோல் அதிரடியான கதைகளில் நடிக்கமுடியாது என்று அவர் படத்தில் நடிப்பதைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக, ரஜினியை முன்புபோல் துடிப்பான கதைகளில் நடிக்கவைக்க முடியாது என்று கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் போன்ற இயக்குநர்கள் நினைப்பதாகவும் இதையடுத்து அந்தக் கதைகளை நடிகர் விஜய்யிடம் சொல்லி 'கால்ஷீட்' கேட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'தளபதி 65' படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தடைபட்டுள்ள நிலையில், அடுத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டில் இப்படத்தை வெளியிட உள்ளதாக புதுத்தகவல் வெளியாகி உள்ளது.