ஒரு காலத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் கதைகளை அவர் மனைவி பாத்திமாதான் முடிவு செய்து வந்தார். அதன் காரணமாகவே நாயகிகளுடன் கணவர் நெருக்கமாக நடிக்கும் காட்சி களுக்கு கதை கேட்கும்போதே 'சென்சார்' போட்டு வந்தார். அதனால்தான் விஜய் ஆண்டனி படங்களில் காதல் காட்சிகள் உப்புசப்பில்லாமல் இருந்தன. இதை அவரது அபிமானிகள் சிலர் நாசூக்காகச் சொன்னதை அடுத்து, இப்போது மனை வியை தள்ளிப் போகச் சொல்லிவிட்டு, தானே கதைகளைக் கேட்டு வருகிறார். அதோடு, இளையர்களின் ரசனைக்கேற்ப காதல் காட்சிகளைத் துாக்கலாக வைக்கவும் கேட்டுள்ளதாக தகவல்.
மனைவியை ஒதுக்கும் விஜய் ஆண்டனி
1 mins read
-

