சமந்தா நடித்த தொடருக்கு கடும் எதிர்ப்பு

சமந்தா நடித்த தொடருக்கு கடும் எதிர்ப்பு

2 mins read
9156b5e7-11eb-4efb-8040-63638fa10da0
'தி ஃபேமிலி மேன்-2' படப்பிடிப்புத் தளத்தில் சமந்தா. -

திரைப்­ப­டங்­கள் மட்­டு­மல்ல, இணை­யத் தொடர்­களும்கூட தற்­போது சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன. அந்த வகை­யில் சமந்தா நடித்­துள்ள 'தி ஃபேமிலி மேன் 2' தொட­ருக்கு எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

ஜூன் 4ஆம் தேதி இணை­யத்­தில் வெளி­யா­கிறது இந்­தத் தொடர். இந்­நி­லை­யில் இதன் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு இரு தினங்­க­ளுக்கு முன்பு வெளி­யா­னது. இதற்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில் 'நாம் தமி­ழர் கட்சி­யின்' சீமான் உள்­ளிட்ட தமிழ்த் தேசிய ஆத­ர­வா­ளர்­கள் இத்­தொ­டரை வெளி­யி­டக்­கூ­டாது என எதிர்ப்­புக் குரல் எழுப்பி உள்­ள­னர்.

இந்­தத் தொட­ரில் இலங்­கை­யைச் சேர்ந்த தீவி­ர­வாத அமைப்பு ஒன்று சென்­னை­யில் குண்­டு­வெ­டிப்­புக்­குத் திட்­ட­மி­டு­வ­தா­க­வும் அதை இந்­திய உள­வுப் பிரி­வில் பணி­யாற்­றும் வடஇந்­தி­யா­வைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வர் கண்­டு­பி­டித்து முறி­ய­டிப்­ப­தா­க­வும் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாம்.

சமந்தா இலங்­கை­யைச் சேர்ந்த பெண் தீவி­ர­வா­தி­யாக நடித்துள்ளார். இது­தான் தமிழ்த் தேசிய ஆத­ர­வா­ளர்­க­ளைச் சீண்­டி­யுள்­ளது.

"இலங்­கைத் தமி­ழர்­களை தீவி­ர­வா­தி­க­ளா­கக் காட்­டு­வ­து­தான் இதன் நோக்­கம். இலங்­கை­யில் ஏரா­ள­மான தமி­ழர்­கள் கொன்று குவிக்­கப்­பட்­ட­னர். அது­கு­றித்து இந்­தத் தொட­ரில் காட்­சிப்­ப­டுத்தி உள்­ள­னரா என்று தெரி­ய­வில்லை. எனவே, இந்­தத் தொடரை வெளி­யி­டத் தடை விதிக்க வேண்­டும்," என்­கி­றார் சீமான். இதே­போல் மேலும் சில அமைப்­பு­கள் தங்­கள் கண்­ட­னத்­தைப் பதிவு செய்­துள்­ளன. எனி­னும், படக்­கு­ழுத் தரப்­பில் இது­வரை எந்­த­வித விளக்­க­மும் அளிக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், தொட­ரின் முதல் பகு­தி­கூட வெளி­வ­ராத நிலை­யில் அதைக் கடு­மை­யாக விமர்­சிப்­

ப­தும் தடை செய்­ய­வேண்­டும் எனக் கூறு­வ­தும் அவ­சி­ய­மில்லை என்ற வாத­மும் கிளம்பி உள்­ளது.

நடிகை சமந்தா இந்த எதிர்ப்­பு குறித்து மறை­மு­க­மா­கக் கருத்து தெரி­வித்­துள்­ளார். "அமை­தி­யாக இருங்­கள். நம்­பிக்­கை­யாக இருங்­கள்" என்று தனது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும், 'முழு;g பாதை­யும் தென்­ப­டா­விட்­டா­லும் நம்­பிக்­கையே முக்­கி­யம்' என்ற மார்ட்­டின் லூதர் கிங்­கின் பொன்­மொ­ழி­யை­யும் அவர் தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.