சகோதரியாகும் ஜோ

சகோதரியாகும் ஜோ

1 mins read

'36 வயதினிலே', 'பொன்மகள் வந்தாள்' என தனக் கேற்ற கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார் ஜோதிகா. இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் அதன் நாயகன் பிரபாசின் சகோதரியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இந்தப் படத்தில் ஷ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். கே.ஜி.எப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் பிரபாசின் சகோதரி பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.