‘சண்டக்காரி’ படம் உருவாக ஒத்துழைத்த ஸ்‌ரேயா

மாதேஷ் இயக்­கத்­தில் உரு­வாகி வரு­கிறது 'சண்­டக்­காரி' படம். ஸ்ரேயா நாய­கி­யாக நடிக்­கி­றார்.

தமி­ழில் அறவே வாய்ப்பு இல்லாத நிலை­யில் இந்­தப் படம் மீண்டும் தனக்கு பெயர் வாங்­கிக் கொடுக்­கும் என்று நம்­பு­கி­றா­ராம் ஸ்ரேயா.

இந்­நி­லை­யில் நேரம் த­வ­றாமை, முழு அர்ப்­ப­ணிப்­பு­டன் நடிப்­பது என்று ஸ்ரேயா பல வகை­யி­லும் ஒத்­து­ழைத்­த­தா­கப் பாராட்­டு­கி­றார் மாதேஷ்.

"என் கதைக்­குப் பொருத்­த­மாக இருப்­பார் என்­ப­தால்­தான் ஸ்ரே­யாவை ஒப்­பந்­தம் செய்ய நினத்­தேன். பெரிய நடிகை என்­ப­தால் பந்தா செய்­வாரோ என்று உள்­ளுக்­குள் ஒரு­வி­தத் தயக்­கம் இருந்­தது.

"ஆனால், ஒரு­சில மும்பை நடி­கை­க­ளைப் போல் தமக்­குப் பாது­காப்­புப் படை வேண்­டும், அதிக சம்­ப­ளம் தர­வேண்­டும் என்று எந்த நிபந்­த­னை­யும் விதிக்­க­வில்லை. அது­மட்­டு­மல்ல, குறித்த நேரத்­தில் படப்­பி­டிப்­புக்கு வரு­வ­து­டன் எந்த வகை­யி­லும் இடை­யூ­றாக இருக்க மாட்­டார். மேலும் படப்­பி­டிப்பு முடிந்து­விட்­டா­லும் மற்­ற­வர்­கள் நடிப்­பதை முடிந்­த­வரை பார்த்­துக் கொண்டு இருப்­பார். இந்த அர்ப்­பணிப்­பு­தான் அவர் தமிழ் ரசிகர்­களால் கொண்­டா­டப்­ப­டக் கார­ணம்," என்­கி­றார் மாதேஷ்.

இவர் 'மதுர', 'மோகினி', 'மிரட்­டல்' உள்­ளிட்ட படங்­களை இயக்கி உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!