சில ஆண்டுகளுக்கு முன்பு தம்மைச் சம்பந்தப்படுத்தி வெளியான ஆபாசக் காணொளிப் பதிவு மனதளவில் தம்மை நொறுங்க வைத்ததாகச் சொல்கிறார் ராதிகா ஆப்தே.
அதிலிருந்து மீண்டுவர தாம் மிகவும் சிரமப்பட்டதாகச் சொல்பவர், திரையுலகில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை இப்போது நன்கு புரிந்துகொண்டிருப்பதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"அந்தக் காணொளிப்பதிவு வெளியானதும் நான்கு நாள்கள் நிம்மதியாகத் தூங்க முடியாமலும் வெளியே தலைகாட்ட முடியாமலும் தவித்தேன்.
"சமூக வலைத்தளங்களில் என்னைக் கேவலமாக அவதூறு செய்தனர். இதையெல்லாம் கடந்துதான் நடித்து வருகிறேன்.
"மேலும் முன்னணி இயக்குநர் ஒருவர் எனது நேரத்தையும் திறமையையும் விரயமாக்கினார். திரையுலகம் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று மனம் புழுங்கினேன்.
"ஆனால் அந்த மோசமான அனுபவம்தான் திரையுலகில் இன்றுவரை நான் நிலைத்து நிற்க உதவிகரமாக இருக்கிறது," என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
ராதிகா
ஆப்தே

