தனுஷ் பாடலுக்கு பலத்த வரவேற்பு

தனுஷ் பாடலுக்கு பலத்த வரவேற்பு

1 mins read
983be964-e5b8-4604-8374-6271f72783d5
-

தனுஷ் படப் பாடல்­கள் என்­றாலே ரசி­கர்­கள் மத்­தி­யில் ஒரு­வித ஆர்­வ­மும் எதிர்­பார்ப்­பும் இருக்­கும்.

அந்த வகை­யில் கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கத்­தில் தனுஷ் நடித்­துள்ள 'ஜெகமே தந்­தி­ரம்' படப் பாடல்­கள் ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த வர­வேற்­பைப் பெற்­றுள்­ளன.

சந்­தோஷ் நாரா­ய­ணன் இந்­தப் படத்­துக்கு இசை­ய­மைத்­துள்­ளார்.

'ரகிட ரகிட', 'புஜ்ஜி' ஆகிய இரு பாடல்­கள் அண்­மை­யில் வெளி­யாகி மக்­கள் மத்­தி­யில் வர­வேற்­பைப் பெற்­றுள்­ளன. இந்நிலை­யில் தனுஷ் தாமே எழுதி பாடி­யுள்ள 'நேத்து' என்ற பாடல் எதிர்­பார்த்­ததை விட அதிக வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

இதை இணை­யத்­தில் வெளி­யிட்ட 7 மணி நேரத்­தி­லேயே ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்பட்ட பார்­வை­க­ளைப் பெற்­றுள்ள நிலை­யில், சமூக வலைத்­த­ளங்­களில் ஏரா­ள­மா­னோர் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.

தனுஷ் படத்­தின் மற்ற பாடல்­க­ளைப் போலவே 'நேத்து' பாட­லும் பல மில்­லி­யன் பார்­வை­க­ளைப் பெற்­றுச் சாதிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.