'அனைத்து பாத்திரங்களிலும் நடிக்க ஆசை'

'அனைத்து பாத்திரங்களிலும் நடிக்க ஆசை'

2 mins read
62fb044a-61f5-443e-8b06-79db6eb12b30
-

விக்­ர­மு­டன் நடிக்க வாய்ப்பு கிடைக்­கும் என்­பதை கன­வில்­கூட நினைத்­துப் பார்க்­க­வில்லை என்­கி­றார் மிரு­ணா­ளினி.

ஒரு நடி­கை­யாக அனைத்து வித­மான கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் நடிக்­க­வேண்­டும் எனும் ஆசை மன­தில் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

'டிக்­டாக்' செய­லி­யில் வெளி­யிட்ட காணொ­ளிப் பதி­வு­கள் மூலம் மக்­கள் மத்தி­யில் பிர­ப­ல­மா­னார் மிரு­ணா­ளினி. தற்போது விக்­ர­மு­டன் 'கோப்ரா' படத்­தில் இணைந்­துள்­ளார்.

மேலும், எம்­ஜி­ஆர் மகன்', 'எனிமி' உள்­ளிட்ட படங்­க­ளி­லும் இவ­ரைக் காண­மு­டி­யும்.

"விக்­ரம் சாரைப் பொறுத்­த­வரை மிக அழ­கான, மிடுக்­கான நாய­கன். நான் அவ­ரு­டைய தீவிர ரசிகை. 'அந்நியன்', 'சாமி' உள்­ளிட்ட படங்­களில் அவ­ரது நடிப்பு அபா­ர­மாக இருக்­கும்.

"அவர் நடித்த படங்­களை ஒன்று விடா­மல் பார்த்­தி­ருக்­கி­றேன். அப்­ப­டிப்­பட்ட நடி­க­ரு­டன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்­தது பெரிய விஷ­யம். வீட்­டில் தொலைக்­காட்சி பார்க்­கும்­போது அவர் நடித்த படங்­க­ளின் பாடல்­களைக் காட்­டும்­போது உற்­சா­க­மா­கி­வி­டு­வேன்.

"இப்­போது அவ­ரு­டன் சேர்ந்து நானும் திரை­யில் தோன்­றப் போகி­றேன் என்­பதை நினைத்­தால் பெரு­மை­யாக உள்­ளது," என்று சொல்­லும் மிரு­ணா­ளினி, விஷால் நாய­க­னாக நடிக்­கும் 'எனிமி' படம் குறித்து இப்­போது எந்­தத் தக­வ­லை­யும் பகிர இய­லாது என்­கி­றார்.

சரி­யான நேரத்­தில் அந்­தப் படம் குறித்த விவ­ரங்­களை இயக்­கு­ந­ரின் அனு­ம­தி­யோடு வெளி­யி­டு­வா­ராம். அது­வரை வாய் திறக்­கக்­கூ­டாது என தமக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருப்­பதாகத் தக­வல்.

"ஒரு நடிகை அனைத்­து­வித கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் நடிக்­கத் தயா­ராக இருக்­க­ வேண்டும். நான் அதற்கு இரு மடங்கு தயா­ராக உள்­ளேன்.

"கஜினி' படத்­தில் அசின் நடித்த கல்­பனா கதா­பாத்­தி­ரம் எனக்கு மிக­வும் பிடித்­த­மா­னது. மிக இயல்­பான துறு­துறு குணா­தி­ச­யம் கொண்ட இளம்­பெண்­ணாக நடிப்­பில் அசத்தி இருப்­பார். அப்­ப­டிப்­பட்ட வேடத்­தில் நடிக்க விரும்­பு­கி­றேன்.

"அதே­போல் 'சந்­தோஷ் சுப்­ர­ம­ணி­யம்' படத்­தில் ஜெனி­லா­வைப் பார்த்­த­வு­ட­னேயே பிடித்­துப் போகும். 'சம்­திங் சம்­திங்' படத்­தில் திரிஷா அமை­தி­யாக இருந்து முக­பா­வங்­க­ளி­லும் கண்­ண­சை­வி­லும் மட்­டுமே மன­தைக் கொள்ளை கொள்­வார்.

"இப்­ப­டிப்­பட்ட வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க விரும்­பு­கி­றேன்," என்­கி­றார் மிரு­ணா­ளினி.

சசி­கு­மா­ரு­டன் 'எம்­ஜி­ஆர் மகன்' படத்­தில் நடித்­த­போது சத்­ய­ராஜ், சமுத்­தி­ர­கனி, சரண்யா பொன்­வண்­ணன் என்று அனு­ப­வக் கலை­ஞர்களுடன் பேசிப் பழ­கும் வாய்ப்பு கிடைத்­ததை வாழ்நாள் அதிர்ஷ்­ட­மா­கக் கரு­து­கி­றா­ராம்.

தேனி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் நடந்ததாம். அப்போது அனைவரும் ஒரே குடும்பம் போல் பாசத்துடன் பழகியதாகச் சொல்கிறார். கிராமங்கள் மனதை கொள்ளை கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மிருணாளினி