ரூ.1,000 கோடி முடக்கம்

ரூ.1,000 கோடி முடக்கம்

3 mins read
ceba5bb3-d4eb-4219-9fbd-3ed35e27167d
-

கொரோனா நெருக்­கடி கார­ண­மாக தமி­ழ­கத்­தில் திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்­டுள்ள நிலை­யில் தயா­ரிப்­புப் பணி­களும் முடங்கி உள்­ளன.

இந்­நி­லை­யில் முன்­னணி நாய­கர்­கள் நடிக்­கும் படங்­கள், பெரிய தயா­ரிப்­பு­கள் என பல படங்­க­ளின் படப்­பி­டிப்­பு­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்­கும் மேல் முடக்­கப்­பட்­டுள்­ள­தாக கோடம்­பாக்­கத்து தயா­ரிப்­பா­ளர்­கள் மத்­தி­யில் முணு­மு­ணுப்­பும் புலம்­பல்­களும் அதி­க­ரித்­துள்­ளன.

ரஜி­னி­காந்த் நடிக்­கும் 'அண்­ணாத்த' படத்­தின் பெரும்­பா­லான காட்­சி­களைப் பட­மாக்கி விட்­ட­னர். இன்­னும் நான்­கைந்து நாள் படப்­பி­டிப்பு நடத்­தி­னால் போது­மாம். மொத்த பட­மும் முடிந்­து­வி­டும்.

அதே­போல் விஜய் நடிக்­கும் 'தள­பதி 65', அஜித்­கு­மா­ரின் 'வலிமை' ஆகி­ய­வற்­றின் படப்­பி­டிப்­பு­களும் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. 'வலிமை'க்கும் ஒரு வார படப்­பி­டிப்பு நடந்­தால் போதும்.

விக்­ரம், சூர்யா, சிவ­கார்த்­தி­கே­யன் ஆகி­யோ­ரின் படங்­கள் திரை­யீடு காணத் தயா­ராக உள்­ளன. ஆனால் ஒவ்­வொரு படத்­தின் வெளி­யீ­டும் குறிப்­பிட்ட சில கார­ணங்­க­ளால் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த வகை­யில் ஆயி­ரம் கோடி ரூபாய்க்­கும் மேல் முடங்கி இருப்­பது தயா­ரிப்­பா­ளர்­க­ளைக் கவலை அடை­யச் செய்­துள்­ளது.

இதற்­கி­டையே தயா­ரிப்­பா­ளர்­கள் குறிப்­பாக குறைந்த செல­வில் படம் எடுப்­ப­வர்­கள் வேறொரு பிரச்­சி­னையை முன்­வைக்­கின்­ற­னர்.

"நாங்­கள் சிர­மப்­பட்டு தயா­ரிக்­கும் படங்­க­ளைத் திரை­யிட பெரும்­பா­லான திரை­ய­ரங்­கு­கள் அவ்­வளவு எளி­தில் முன்­வ­ரு­வ­தில்லை. மேலும் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­ட­லாம் என்­றால் அது­வும் குதி­ரைக்­கொம்­பாக இருக்­கிறது," என்­பது இந்­தத் தயா­ரிப்­பா­ளர்­க­ளின் புலம்­ப­லாக உள்­ளது.

இந்­தாண்டு ஜன­வரி மாதம் ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்ட பிறகு, மீண்­டும் ஏப்­ரல் மாதம் ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்பு 60 சிறிய பட்­ஜெட் படங்­கள் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யாகி இருந்தன.

"நான்கு மாதங்­க­ளுக்­குள் இத்­தனை படங்­களை வெளி­யிட்­டால் திரை­ய­ரங்­கு­கள் கிடைப்­பது கடி­னம்­தான். மேலும் 'மாஸ்­டர்', 'ஈஸ்­வ­ரன்' உள்­ளிட்ட சில பெரிய படங்­களும் வெளி­யா­கின. வழக்­கம்­போல் சிறிய படங்­கள் வந்த வேகத்­தில் திரையரங்கை விட்டு ஓடி­விட்­டன.

"பெரும்­பா­லான படங்­க­ளுக்கு ஒரு நாளில் ஒரு காட்சி மட்­டுமே திரை­ய­ரங்­கு­க­ளால் ஒதுக்­கப்­பட்­டன. எனவே, இப்­படி ஒரு படம் வெளி­யாகி இருக்­கிறது என்­பதே ரசி­கர்­க­ளுக்­குத் தெரி­யா­மல் போய்­விட்­டது," என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள்.

அது­மட்­டு­மல்ல, இவ்­வாறு குறைந்த செல­வில் எடுக்­கப்­பட்ட சுமார் ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட படங்­கள் வெளி­யீடு காண வழி­யின்றி முடங்கி இருப்­ப­தா­க­வும் கோடம்­பாக்­கத்­தில் கூறப்­ப­டு­கிறது.

இன்­றைய கால­கட்­டம் குறைந்த செல­வில் படங்­கள் தயா­ரிக்க சாத­க­மாக இல்லை என்­கி­றார் தயா­ரிப்­பா­ளர் சி.வி. குமார். 'அட்­ட­கத்தி', 'பீட்சா', 'சூது கவ்­வும்' உள்­ளிட்ட படங்­க­ளைத் தயா­ரித்து அதிக வெற்றி­களை­யும் வசூ­லை­யும் ஈட்­டிய தயா­ரிப்­பா­ளர் இவர்.

"தொழில்­நுட்­பங்­கள் வளர்ந்­தி­ருப்­ப­து­டன் எளி­தா­க­வும் உள்­ளன. அத­னால், குறைந்த செல­வில் பட­மெ­டுப்­பது சாத்­தி­ய­மா­கிறது. ஆனால் நல்ல கதைக்­கரு, கதைக்­க­ளத்து டன் உரு­வா­கும் படங்­க­ள்­தான் ரசி­கர்­க­ளைப் படம் பார்க்­கத் தூண்­டு­கிறது.

"தர­மான உள்­ள­டக்­கம் இருந்­தால் மட்­டுமே இணைய நிறு­வ­னங்­களும் படங்­களை வாங்­கு­கி­றார்­கள். அதே­ச­ம­யம் நல்ல படங்­க­ளை­யும்­கூட இணை­யத்­தில் செல­வின்றி பார்த்­துக் கொள்­ள­லாம் என்று ஒரு­த­ரப்பு ரசி­கர்­கள் முடிவு செய்­து­விட்­ட­னர்.

"அத­னால் சுற்­றி­லும் பல சவால்­கள் காத்­தி­ருக்­கின்­றன. நல்ல உள்­ள­டக்­கம் இல்­லை­யென்­றால் திரைப்­ப­டங்­க­ளுக்­காக வைக்­கப்­படும் பதா­கை­க­ளுக்கு செல­விட்ட காசு கூட­ தி­ரும்­பக் கிடைக்­காது," என்­கி­றார் சி.வி. குமார்.

அப்­படி இருந்­தும் பலர் குறைந்த செல­வில் படம் தயா­ரிப்­பது ஏன் என்று கேட்­டால், திரை­யு­ல­கம் ஒரு சூதாட்­டக் களம்­போல் மாறி­விட்­ட­தாக அவர் சொல்­கி­றார்.

மற்­றொரு தயா­ரிப்­பா­ள­ரான தனஞ்செயன் குறைந்த செல­வில் உரு­வா­கும் படங்­களை இணைய நிறு­வ­னங்­கள் வாங்­கு­வ­தில்லை என்­பது உண்மை அல்ல என்­கி­றார்.

, :   

சிவ

கார்த்திகேயன்