அருண் விஜய் நடித்துள்ள 'பார்டர்' படத்துக்கு புதுச்சிக்கல் முளைத்துள்ளது. இதே பெயரில் ஏற்கெனவே ஒரு படம் உருவாகி உள்ளதாம். இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள படத்தில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாகத் தகவல். அண்மையில் இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியிடப்பட்டது. 'குற்றம் 23' படத்தை தொடர்ந்து அருண் விஜய் அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இது. இந்நிலையில் 'பார்டர்' என்ற பெயரில் ஏற் கெனவே தினா நடிப்பில் ஒரு படம் உருவாகி தணிக்கை வரை சென்றுள்ளதாம். அது தெரியாமல் அருண் விஜய் படத் துக்கும் 'பார்டர்' என பெயர் வைத்துள்ளனர். இதனால் பெயர் தொடர்பான மோதல் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
'பார்டர்' படத் தலைப்புக்காக தொடங்கியது மோதல்
1 mins read

