சித்தார்த் நடிப்பில் உருவாகும் புதிய படம் 'டக்கர்'.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி உள்ள இப்படத்தில் திவ்யான்ஷா நாயகியாக நடிக்கிறார்.
"எப்போதும் கோபத்துடனேயே வலம்வரும் இரண்டு இளையர்கள் திடீரென சந்திக்க நேரிடுகிறது.
"ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத போக்குடன் செயல்படுவதால் இருவரது வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவை என்ன மாதிரியான பிரச்சினைகள் என்பதை சுவாரசியமாக சொல்லப் போகிறோம்.
"இந்தப் படத்தில் தந்தை, மகன் என இரு தோற்றங்களில் நடிக் கிறார் யோகி பாபு. அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் அரங்கம் அதிரப்போவது நிச்சயம். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
"சித்தார்த் வழக்கம்போல் இதிலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். திவ்யான்ஷா நடிப்பும் இயல்பாக இருக்கும். மொத்தத்தில் இது தரமான படம்," என்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ்.

