மூன்று பாடல்கள்; 200 மில்லியன் பார்வைகள்

மூன்று பாடல்கள்; 200 மில்லியன் பார்வைகள்

2 mins read
d7304781-d61b-4aa4-a93b-1f5137b27843
'மாரி 2' படத்தில் இடம்பெற்ற காட்சியில் தனுஷ், சாய் பல்லவி. -

தாம் நடிக்கும் படங்களில் இடம்பெறும் பாடல்கள் பெரும் வரவேற்பு பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் நடிகை சாய் பல்லவி.

அவர் நடினமாடியுள்ள மூன்று பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளனவாம்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நல்ல கதைகளாகத் தேடி நடித்து வருகிறார் சாய்பல்லவி.

ராணாவுடன் 'விராட பருவம்', நாக சைதன்யாவுடன் 'லவ் ஸ்டோரி', ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சாய் பல்லவியின் நடனத் திறமை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

நளினமான நடன அசைவுகளுக்காக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார்.

இதன் காரணமாகவே இவர் நடனமாடும் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.

இந்நிலையில் சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளன.

'மாரி-2' படத்தில் இடம்பெற்ற 'ரௌடி பேபி' பாடல் 1,150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதேபோல் 'பிடா' எனும் தெலுங்குப் படத்தில் இடம்பெற்றுள்ள 'வச்சிந்தே' என்ற பாடல் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்நிலையில் 'லவ் ஸ்டோரி' தெலுங்கு படத்தில் இடம்பெற்ற 'சாரங்க தரியா 'பாடலும் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் சாய் பல்லவி.

இந்தியத் திரையுலகில் வேறெந்த நடிகையும் இப்படியொரு சாதனையைப் படைத்ததில்லை என்று சாய்பல்லவியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

சாய் பல்லவியும் இந்தச் சாத னையால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.