'நஷ்டம் ஏற்படக்கூடாது'

'நஷ்டம் ஏற்படக்கூடாது'

3 mins read
a5430d0f-82e5-440c-ad08-d01cf68fe9b0
-

"கர்­ணன்' படத்­தில் நடித்த பிறகு தமி­ழ­கம் முழு­வ­தும் அறி­யப்­பட்ட பெண்­ணாக நான் மாறி­விட்­டேன். இது­தான் சினி­மா­வின் தாக்­கம்," என்று உற்­சா­கத்­து­டன் பேசு­கி­றார் ரஜிஷா.

தற்­போது கார்த்­தி­யு­டன் 'சர்­தார்' படத்­தில் நடித்து வரு­ப­வர், அடுத்து சூர்­யா­வின் படத்­தி­லும் ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

'கர்­ணன்' படத்­தில் நடித்­த­போது இவ­ருக்கு தமிழ் அவ்­வ­ள­வாக வரா­தாம். இப்­போது தமி­ழில் சர­ள­மா­கப் பேசு­கி­றார். மொழி தெரிந்து நடித்­தால் கதா­பாத்­தி­ரம் மேலும் வலு­வ­டை­யும் என்று நம்­பு­கி­றா­ராம்.

"தமி­ழில் எனது முதல் படமே பெரி­தா­கப் பேசப்­பட்­ட­தில் மகிழ்ச்சி. சொந்த ஊரான கேர­ளா­வில்­கூட, நான் அச்சு அச­லாக தமிழ்ப் பெண்­ணா­கவே மாறி­விட்­ட­தாக பாராட்­டி­னர். பலர் ஆச்­ச­ரி­யத்­து­டன் இந்­தப் படம் குறித்­தும் எனது கதா­பாத்­தி­ரம் பற்­றி­யும் விசா­ரிக்­கும்­போது பெரு­மை­யாக உணர்­கி­றேன்.

"எல்­லாப் புக­ழும் என்னை அந்­தப் படத்­தில் நடிக்க வைத்த மாரி செல்­வ­ரா­ஜுக்­கும் படக்­கு­ழு­வுக்­கும்­தான் போய்ச்­சேர வேண்­டும். தொடர்ந்து தமிழ்ப் படங்­களில் நடிக்க விரும்­பு­கி­றேன்," என்று சொல்­லும் ரஜிஷா இது­வரை நடித்த படங்­கள், கதா­பாத்­தி­ரங்­கள் எல்­லாமே வெற்றி பெற்­றுள்­ளன.

'அனு­ரா­கக்­க­ரிக்­கின் வெல்­லம்', 'ஃபைனல்ஸ்', 'லவ்', 'ஜூண்' என வரி­சை­யாக எப்­படி வெற்­றிப் படங்­க­ளைத் தர முடிந்­தது? என்று கேட்­டால், கதா­பாத்­தி­ரங்­க­ளின் தன்­மையை வைத்தே வாய்ப்­பு­களை ஏற்பதா­கச் சொல்­கி­றார்.

"நல்ல கதை­க­ளு­டன் பல­ரும் என்­னைச் சந்­திப்­பது எனது அதிர்ஷ்­டம். கதை கேட்­கும்­போதே மன­தில் ஒரு பொறி தோன்­றும். பிடித்­தி­ருந்­தால் உடனே சம்­ம­தம் தெரி­வித்து விடு­வேன்.

"கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள படத்­தில்­தான் நடிப்­பேன் என பிடி­வா­தம் பிடிப்­ப­தில்லை. ஏற்­கெ­னவே நான் நடித்த படங்­கள், கதா­பாத்­தி­ரங்­க­ளின் சாய­லு­டன் வரு­ப­வர்­க­ளைத் தவிர்த்து விடு­கி­றேன். இவ்­வாறு செயல்­ப­டு­வ­து­தான் தொடர்ந்து நல்ல கதா­பாத்­தி­ரங்­க­ளாக அமை­வ­தற்­குக் கார­ணம் என நினைக்­கி­றேன்," என்று சொல்­லும் ரஜிஷா, ஒவ்­வொரு படத்­தி­லும் மிகுந்த ஈடு­பாட்­டு­டன் நடிப்­ப­தா­கக் கூறு­கி­றார்.

படம் பார்க்­கும் ரசி­கர்­கள் ஒவ்­வொரு முறை­யும் தம்மை வித்­தி­யா­ச­மான தோற்­றத்­தி­லும் கதா­பாத்­தி­ரத்­தி­லும் பார்க்­க­வேண்­டும் என்­ப­து­தான் தமது விருப்­பம் என்று சொல்­ப­வர், வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­கள்­தான் தமது வெற்­றிக்­குக் கார­ணம் என்­கி­றார்.

"அதிர்ஷ்­ட­வ­ச­மாக அமை­யும் கதா­பாத்­தி­ரங்­களை நான் வீண­டிப்­ப­தில்லை. அவற்றை மெரு­கேற்­று­வ­தற்­காக தீவிர பயிற்சி மேற்­கொள்­வேன். ஒரு படத்­தில் நடிப்­ப­தாக ஒப்­புக்­கொண்­டால் பிறகு அந்­தப் படைப்­பில் அனைத்து வகை­யி­லும் எனது பங்­க­ளிப்பு இருக்க வேண்­டும் என்று நினைப்­பேன். இதே­போன்று நினைக்­கும் சில­ரு­டன் கூட்­டணி அமை­வ­தும் எனக்கு வச­தி­யாக உள்­ளது," என்று சொல்­லும் ரஜிஷா, அடுத்து தெலுங்­கி­லும் அறி­மு­க­மாக உள்­ளார்.

அறி­முக இயக்­கு­நர் சரத் என்­ப­வர் இயக்­கும் படத்­தில் நாய­கன் ரவி தேஜா­வுக்கு ஜோடி­யாக இவரை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­ன­ராம்.

"மலை­யா­ளத்­தில் இது­வரை நான் கிரா­மிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­த­தில்லை. முதன்­மு­றை­யாக 'கர்­ணன்' படத்­துக்­காக கிரா­மத்­துப் பெண்­ணுக்­கு­ரிய ஒப்­ப­னை­யைப் போட்­டுக் கொண்­ட­போது வித்­தி­யா­ச­மாக உணர்ந்­தேன்.

"ஆனால், படப்­பி­டிப்­புக்கு முன்பே இந்த ஒப்­ப­னை­யு­டன் அந்­தக் கிரா­மத்­தில் சுற்­றித் திரிந்து பல­ரு­டன் பேசிப் பழ­கி­ய­போது அந்த கிரா­மம் மீது எனக்­கும் தனிப் பாசம் வந்­து­விட்­டது. எல்­லோ­ரு­ட­னும் சேர்ந்து ஒரே இடத்­தில் தங்கி இருந்­தது அந்­தக் கிரா­மத்­தி­லேயே பல காலம் வாழ்ந்த உணர்­வைத் தந்­தது.

"இதற்கு முன்பு விளை­யாட்­டுத் துறை சம்­பந்­தப்­பட்ட இரண்டு படங்­களில் நடித்­துள்­ளேன். இரண்­டும் வெற்­றிப் படங்­க­ளாக அமைந்­தன. தமி­ழி­லும் அதே­போன்ற வாய்ப்­பு­கள் அமைந்­தால் மகிழ்ச்சி அடை­வேன்.

"என்­னைப் பொறுத்­த­வரை நல்ல நடிகை என்று நம்பி என்னை ஒப்­பந்­தம் செய்­ப­வர்­க­ளுக்கு என்­னால் எந்த வகை­யி­லும் சங்­க­டமோ நஷ்­டமோ ஏற்­பட்டு விடக்­கூ­டாது. 'கர்­ணன்' என்ற ஒற்­றைப்­ப­டம் ஒட்­டு­மொத்த தமி­ழ­கத்­துக்­கும் என்னை அறி­மு­கப்­ப­டுத்தி இருப்­ப­து­தான் அண்­மைக் காலத்­தில் என் வாழ்­வில் நடந்த மகிழ்ச்­சி­யான நிகழ்வு," என்று நெகிழ்­கி­றார் ரஜிஷா.

ரஜிஷா விஜயன்

, :   