'கோடி ரூபாய் கொடுத்தாலும் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்'

'கோடி ரூபாய் கொடுத்தாலும் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்'

1 mins read
80f96631-72f5-428b-86e2-9c18e84e2f65
'கைதி' திரைப்படக் காட்சி ஒன்றில் நடிகர் கார்த்தி. படம்: இணையம் -

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'சுல்தான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.

அண்மையில் முன்னணி நடிகர்கள் பலரும் 'மாஸ்' காட்டுவதற்காக புகை பிடிக்கும் காட்சிகளைப் படங்களில் வைத்து வருகின்றனர். பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்தாலும் 20 படங்கள் மட்டுமே நடித்திருக்கும் கார்த்தி தன்னுடைய படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறார்.

இதுகுறித்து கூறிய கார்த்தி, "கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்," என்று கூறியுள்ளார். இதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி