ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் சூர்யா

ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் சூர்யா

2 mins read

மணி­ரத்­னம் ஒன்­பது இயக்­கு­நர்­களை வைத்து ஒன்­பது குறும்­ப­டங்­களை 'நவ­ரசா' எனும் தலைப்­பில் இணை­யத்­தொ­ட­ர் ஒன்றைத் தயாரித்திருக்கிறார். அந்­தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளி­யாக உள்­ளது. அதில் சூர்யா நடித்­தி­ருக்­கும் ஒரு குறும்­ப­ட­மும் உள்­ளது.

அத­னால் அவ­ரின் ரசி­கர்­கள்

ஆவ­லு­டன் படத்­தின் வெளி­யீட்­டிற்­கா­கக் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் சென்ற ஊர­டங்­கின்­போது 'புத்­தம் புது காலை', 'பாவக்­க­தை­கள்', 'குட்டி ஸ்டோரி' உள்­ளிட்ட 'ஆந்­தா­லஜி' திரைப்

­ப­டங்­கள் வரி­சை­யாக வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்­பைப் பெற்­றன.

அத­னால் பல இயக்­கு­நர்­கள் 'ஆந்­தா­லஜி' திரைப்­ப­டம் எடுப்­

ப­தில் ஆர்­வம் காட்டி வரு­கி­றார்­கள். அந்த வரி­சை­யில் தயா­ரிப்­பா­ள­ராக 'ஆந்­தா­லஜி' படத்தை உரு­வாக்கி வரு­கி­றார் இயக்­கு­நர் மணி­ரத்­னம்.

கெள­தம் மேனன், ஹலிதா ஷமீம், கே.வி. ஆனந்த், கார்த்­திக் சுப்­பு­ராஜ், பொன்­ராம், பிஜாய் நம்­பி­யார், அர­விந்த் சாமி மற்­றும் ஆர். பிர­சாத் உள்­ளிட்ட 9 இயக்­கு­நர்­கள் 9 குறும்­ப­டங்­களை இயக்கி உள்ளனர்.

இந்த ஒன்பது கதைகளில் சூர்யா, விஜய்­சே­து­பதி, சித்­தார்த், அர­விந்த் சாமி, பாபி சிம்ஹா, பிர­காஷ் ராஜ், கெள­தம் கார்த்­திக், அசோக் செல்­வன், நித்யா மேனன், ரோபோ சங்­கர், பார்­வதி, அம்மு அபி­ராமி, பூர்ணா, விக்­ராந்த், ஐஸ்­வர்யா ராஜேஷ், அழ­கம் பெரு­மாள், ரித்­விகா என மிகப்­பெ­ரிய நட்­சத்­திர பட்­டா­ளமே நடித்துள்ளது.

'காக்க காக்க', 'வார­ணம் ஆயி­ரம்' வெற்­றிப்­ப­டங்­களைத் தந்த கௌத­மும் சூர்­யா­வும் மூன்­றா­வது முறை­யாக 'நவ­ரசா'வில் இணைந்­தி­ருக்­கின்­ற­னர்.

இவர்­க­ளின் தொட­ருக்கு

'கம­லும் கதாம்­ப­ரி­யும்' என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. கெள­தம் வாசு­தேவ் இதற்கு முன்பு ஒரு ­சில 'ஆந்­தா­லஜி' படங்­களை இயக்கி இருந்­தா­லும் சூர்­யா­விற்கு இது­தான் முதன்­முறை.

இந்­நி­லை­யில் வெளி­யீட்­டுக்­குத் தயா­ராக இருக்­கும் 'நவ­ரசா' இணை­யத்­தொ­டர் வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நெட்­பி­ளிக்ஸ் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யா­கும் என்று அறி­வித்து இருக்­கின்­ற­னர்.

சூர்யா, கௌதம் இணைந்த படங்­கள் மிகப்­பெ­ரிய அள­வில் வெற்றி பெற்­றி­ருக்­கின்­றன. அத­னால் இந்­தப் பட­மும் மிகப்பெரிய அள­வில் வெற்றிபெறும் என்ற ஆவ­லில் காத்­தி­ருக்­கின்­ற­னர் சூர்­யா­வின் ரசி­கர்­கள்.

இந்­நி­லை­யில் இயக்­கு­நர் பாண்டி­­ராஜ் சூர்­யாவின் 40வது படத்தை இப்­போது இயக்கி வரு­கி­றார்.

அந்­தப் படத்­தைப் பற்றி அவர் கூறு­கை­யில், "கார்த்தி நடித்­

தி­ருந்த 'கடைக்­குட்டி சிங்­கம்' எப்­படி அவ­ரு­டைய ரசி­கர்­க­ளுக்கு சிறப்­பான பட­மாக அமைந்­ததோ அதுபோல் இந்­தப் படம் சூர்யா ரசி­கர்­க­ளுக்கு அமை­யும்.

"அது­மட்­டு­மல்­லா­மல் படத்­தின் தலைப்­பு, காட்சிகள் ஆகியவற்றில் சிறப்­பாக கவ­னம் செலுத்தி வரு­கி­றேன். இதன் மூலம் சூர்யா ரசி­கர்­க­ளுக்கு சிறப்­பான படத்­தைக் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்.

"அண்­மைக் காலமாக சூர்யா கிரா­மத்து வேடங்­களில் அதி­ரடி காட்டி வரும் நிலை­யில், இந்த படமும் ஒரு வித்­தி­யா­ச­மான சூர்­யாவை ரசி­கர்­க­ளுக்கு அடை­யா­ளம் காட்­டும்," என்று அவர் கூறி­னார்.

இந்­தப் படத்­தில் ப்ரி­யங்கா மோகன், சத்­ய­ராஜ், சரண்யா பொன்­வண்­ணன், இள­வ­ரசு என பல­ரும் நடிக்­கி­றார்­கள்.

சூர்யா நடிக்கும் இந்தப் படத்திற்கு முதன்முறையாக டி.இமான் இசையமைக்கிறார்.