"என் ரசிகர்களுக்காக உழைக்கிறேன்"

"என் ரசிகர்களுக்காக உழைக்கிறேன்"

2 mins read
a7461288-8808-4ce7-8840-3176b73ccb7b
-

தமிழ் திரை­யு­ல­கில் பல படங்­களில் நடித்து வரு­ப­வர் விஜய் சேது­பதி. பல படங்­களில் ஒப்­பந்­த­மாகி இருக்­கும் விஜய் சேது­பதி பணத்­தா­சை­யில்­தான் மேலும் மேலும் புதுப்­ப­டங்­களில் நடிக்க ஒப்­புக் கொள்­கி­றார் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு கிளம்­பி­யது.

அதற்கு விஜய் சேது­பதி "நான் ஒரு­போ­தும் பணத்­தின் பின்­னால் ஓடி­யது இல்லை. என் ரசி­கர்­களை மகிழ்­விக்­கவே உழைக்­கி­றேன்," என்று கூறி­யுள்­ளார்.

லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் உலக நாய­கன் கமல் ஹாசன் நடிக்­கும் 'விக்­ரம்' படத்­தில் அவ­ருக்கு வில்­ல­னாக நடிக்க ஒப்­புக்கொண்டு இருக்கிறார் விஜய் சேது­பதி.

'விக்­ரம்' படத்­தில் வில்­ல­னாக நடிக்­கக் கேட்­ட­தும் முத­லில் அவர் ஒத்­துக்­கொள்­ள­வில்லை. கை நிறைய படங்­கள் இருக்­கும்­போது இந்­தப் படத்­திற்கு நாள் ஒதுக்க முடி­யுமா என்று யோசித்­தார். பின்­னர் உல­க­நா­ய­க­னு­டன் நடிக்­கும் வாய்ப்பை விட்­டுக்­கொ­டுக்க முடி­யா­மல் ஒத்­துக்­கொண்­டார்.

இதுபோதாது என்று 'சன்' தொலைக்­காட்­சி­யில் விரை­வில் ஒளி­ப­ரப்­பா­க­ இருக்­கும் 'மாஸ்­டர் ஷெஃப்' நிகழ்ச்­சி­யையும் தொகுத்து வழங்­க­ ஒப்­புக் கொண்­டி­ருக்­கி­றார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க பலரும் அணுகுவதால் இவர் பணத்தின் மேல் ஆசை கொண்டு இப்படித் தொடர்ந்து நடிக்கிறார் என்று இவரின் உயர்வைக் கண்டு பொறாமைப்படுபவர்கள் பேசி வருகின்றனர்.

இந்­நி­லை­யில் இவ­ரு­டைய குரு­வான எஸ்.பி.ஜன­நா­தன் அண்­மை­யில் கால­மா­னார். அத­னால் மன­மு­டைந்து போனார் விஜய் சேது­பதி.

சில நாட்களாக மன அமைதி இல்­லா­மல் படங்களில் நடித்து வந்தார். தற்­பொ­ழுது கொரோனா காரணமாக படப்­பி­டிப்­பு­கள் அனைத்­தும் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அத­னால் விஜய் சேது­பதி தாடி, மீசை­யு­டன் அமைதி வேண்டி புதுச்­சே­ரி­யில் இருக்­கும் ஆரோ­வில் ஆசி­ர­மத்­திற்­குச் சென்றார்.

அங்கு அவர் நிம்­ம­தி­யாக தோட்­டங்­களில் சுற்­றித் திரிந்து, அங்­கி­ருக்­கும் மாம­ரங்­களில் இருந்து மாங்­காய் பறிப்­பது போன்ற காணொ­ளி­கள் வெளி­யாகி உள்­ளன. அதைப் பார்த்த அவ­ரின் ரசி­கர்­கள் அதனை சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.