கார்த்தி: அதுபோன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன்

கார்த்தி: அதுபோன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன்

1 mins read
7e318a48-8153-48f3-b01d-fef165bff161
-

தமிழ் சினி­மா­வில் சிறந்த கதை­களை தேர்ந்­தெ­டுத்து நடித்து வரு­ப­வர் கார்த்தி. இவர் நடிப்­பில் கடை­சி­யாக வெளி­யான 'சுல்­தான்' திரைப்­ப­டம் கல­வை­யான விமர்­ச­னங்­க­ளைப் பெற்­றா­லும் வசூல் ரீதி­யாக ஒரு நல்ல பட­மாக அமைந்­தது என்று கூறப்­ப­டு­கிறது.

அண்­மை­யில் முன்­னணி நடி­கர்­கள் பல­ரும் 'மாஸ்' காட்டு­வ­தற்­காக புகை பிடிக்­கும் காட்­சி­க­ளைப் படங்­களில் வைத்து வரு­கின்­ற­னர். பல ஆண்­டு­க­ளாக திரைத்­து­றை­யில் இருந்­தா­லும் 20 படங்­கள் மட்­டுமே நடித்­தி­ருக்­கும் கார்த்தி தன்­னு­டைய படங்­களில் புகை­பி­டிக்­கும் காட்­சி­க­ளைத் தவிர்த்து வரு­கி­றார்.

இதுகுறித்து கூறிய கார்த்தி, "கோடி ரூபாய் கொடுத்­தா­லும் புகைப்­பி­டிக்­கும் காட்­சி­களில் நடிக்க மாட்­டேன்," என்று கூறி­யுள்­ளார். இதைப் பல­ரும் பாராட்டி வரு­கின்­ற­னர்.