திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
c5c9b6ca-9c6c-4f73-8e29-90be1eef034f
-
multi-img1 of 3

12 மொழிகளில் தென்னிந்திய படம்

ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் 'ஓடிடி' உரிமை 'ஜீ 5' வாங்கியுள்ளது. இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படம் இந்திய மொழிகளான தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, அந்நிய மொழிகளான ஆங்கிலம், போர்ச்சுகீஸ், கொரியன், துர்க்கிஷ், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. அவற்றோடு ஜப்பான், சீனா மொழிகளிலும் படத்தை வெளியிட உள்ளனர். இதன் மூலம் உலக அளவில் 12 மொழிகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகப் போகிறது. ஒரு தென்னிந்தியத் திரைப்படம் இத்தனை மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறை.

எஸ்.ஜே.சூர்யா: யுவனின் பாடல் அற்புதம்

இயக்குநர் ராதா மோகன் தற்பொழுது எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கரை வைத்து 'பொம்மை' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகவும் யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து கொரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த சூர்யா, "என்னை நம்புங்கள். 'பொம்மை' திரைப்படத்தில் யுவனின் பாடல்கள் அற்புதமாக இருக்கும். பின்னணி இசை முற்றிலும் வேறொரு தளத்தில் அட்டகாசமாக இருக்கும்," என்று யுவனைப் பாராட்டியுள்ளார்.

ஷிவாங்கி: நன்றி அண்ணா

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பெரிய திரையில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் ஷிவாங்கி. இவருடைய பிறந்தநாளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக சிவகார்த்திகேயன் கேக் அனுப்பி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இவருடன் ஷிவாங்கி 'டான்' படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் அனுப்பிய கேக்கைப் படமெடுத்து தனது இன்ஸ்டகிராமில், "இதைச் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா," என்று பதிவிட்டு இருக்கிறார். அஸ்வின் என்ன

பரிசு வழங்கினார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவரும் ஷிவாங்கிக்கு பிறந்தநாள் கேக் அனுப்பி வைத்து அதில் 'பிறந்தநாள் வாழ்த்துகள் ரௌடி' என்று வாழ்த்து தெரிவித்து இருந்தார்.