நாயகிகளின் நற்செயல்கள்

நாயகிகளின் நற்செயல்கள்

3 mins read
e1afc4a5-c786-4d48-b548-9cffea5341c8
ஆண்ட்ரியா -

அண்­மைக்­கா­ல­மாக நடி­கை­கள் பல்­வேறு விஷ­யங்­கள் குறித்து மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

அந்த வகை­யில் வீட்­டி­லேயே தோட்­டம் வளர்த்து பசுமை காக்க வேண்­டும் என்­கி­றார் ஆண்ட்­ரியா. அண்­மைய புய­லில் மும்­பை­யில் ஆயி­ரக்­க­ணக்­கான மரங்­கள் சேத­ம­டைந்­த­தால், மரக்­கன்­று­களை நட அறி­வு­றுத்தி உள்­ளார் கங்­கனா ரணா­வத்.

நடி­கை­கள் கீர்த்தி சுரேஷ், ராஷ்­மிகா மந்­தனா உள்­ளிட்­டோர் கொரோனா விழிப்­பு­ணர்வு காணொ­ளி­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

கொரோனா ஊர­டங்­கின்­போது மக்­கள் பய­னுள்ள வகை­யில் தங்­கள் பொழு­தைச் செல­விட வேண்­டும் என்­கி­றார் நடிகை ஆண்ட்­ரியா.

நாம் செய்­யக்­கூ­டிய விஷ­யங்­கள், நமக்கு மட்­டு­மல்­லா­மல் சமு­தா­யத்­துக்­கும் உத­வும் வகை­யில் இருக்­க­வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்தி உள்­ளார்.

"என் வீட்டு மொட்டை மாடி­யில் அழ­கிய தோட்­டம் ஒன்றை அமைத்­துள்­ளேன். அதில் ஏரா­ள­மான செடி­கொ­டி­களை நட்டு தின­மும் பரா­ம­ரித்து வரு­கி­றேன். இவ்­வாறு செய்­வது பசு­மை­யைக் காக்க உத­வும்.

"வீட்­டுக்­குள் இருக்­கும் தோட்­டத்தை அடிக்­கடி பார்க்­கும்­போது மன­தில் புத்­து­ணர்ச்சி ஏற்­படும். சுத்­த­மான காற்று, அழ­கிய சூழ்­நிலை, கண்­ணைக் கவ­ரும் செடி­கொ­டி­கள், பூக்­கள் ஆகி­யவை நம் உடல்­ந­லத்தை நன்­றாக வைத்­தி­ருக்­க­வும் உத­வும்," என்­கி­றார் ஆண்ட்­ரியா.

இயற்கை மீது தாம் தீராத அன்பு கொண்­டி­ருப்­ப­தாக குறிப்­பி­டு­ப­வர், மற்­ற­வர்­களும் தன்­னைப் போன்று சமூக அக்­க­றை­யு­டன் முடிந்­த­வரை சேவை­யாற்ற வேண்­டும் என சமூக வலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

இதற்­கி­டையே நடிகை கங்­கனா ரணா­வத் தனது ரசி­கர்­கள் தங்­க­ளால் இயன்­ற­வரை மரக்­கன்­று­களை நட­வேண்­டும் எனக் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

மேலும் தாம் மரக்­கன்று நடும் புகைப்­ப­டத்­தை­யும் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் வெளி­யிட்­டுள்­ளார்.

அண்­மை­யில் வீசிய புய­லால் மும்­பை­யில் ஆயி­ரக்­க­ணக்­கான மரங்­கள் சரிந்­து­விட்­டன. குஜ­ராத்­தில் 50 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மரங்­கள் வேரோடு சாய்ந்­து­விட்­ட­தா­கத் தக­வல். இத்­த­கைய தக­வல்­க­ளைக் குறிப்­பிட்­டுள்ள கங்­கனா ரணா­வத், தம்­மால் இரு­பது மரக்­கன்­று­களை மட்­டுமே தற்­போது நட­மு­டிந்­த­தா­க­வும் வாய்ப்­புக் கிடைக்­கும்­போது இந்த எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

அழிந்­து­விட்ட மரங்­க­ளுக்கு மாற்­றாக என்­ன­மா­தி­ரி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளப் போகி­றார்­கள் என அதி­கா­ரி­க­ளுக்­குக் கேள்வி எழுப்பி­யுள்ள கங்­கனா, ஒவ்­வொரு தனி மனி­த­ரும் பசு­மை­யைக் காக்க தங்­க­ளால் இயன்ற பங்­க­ளிப்பை வழங்­க­வேண்­டும் எனக் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

இதற்­கி­டையே இளம் நாய­கி­கள் கீர்த்தி சுரே­ஷும் ராஷ்­மிகா மந்­த­னா­வும் கொரோனா விழிப்­பு­ணர்வுக் காணொ­ளிப் பதி­வு­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

கொரோனா கிரு­மியை முற்­றி­லு­மா­கக் கட்­டுக்­குள் கொண்­டு­வர சிறு­சிறு வழி­மு­றை­களை முறை­யா­கப் பின்­பற்­றி­னாலே போதும் என்று கீர்த்தி தெரி­வித்­துள்­ளார்.

அவ­சி­ய­மான இடங்­களில் இரண்டு முகக்­க­வ­சங்­கள் அணி­வது நல்­லது என்றும் தாம் முதல் தவணை தடுப்பூசியைப் போட்­டுக்கொண்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டுள்ள அவர், கொரோனா இல்­லாத தமி­ழ­கத்தை உரு­வாக்க அனை­வ­ரும் முன்­வர வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ளார்.

ராஷ்­மிகா மந்­தனா தமது டுவிட்­டர் பக்­கத்­தில் அனை­வ­ரும் நேர்­மறை சிந்­த­னை­களை மட்­டுமே பரப்ப வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ளார்.

"இப்­போது நாம் எதிர்­கொண்­டுள்ள சிர­மங்­கள் அனைத்­துமே விரை­வில் முடி­வுக்கு வரும். நோய்த்தொற்று முடி­வுக்கு வரும் வரை அனை­வரும் பாது­காப்­பாக இருக்க வேண்­டும். கொரோனா தொற்று நாம் நினைத்துப் பார்க்க முடி­யாத வழி­களில் சவால் விடு­கிறது. இத்­த­கைய கடி­ன­மான தரு­ணங்­களில் நேர்­ம­றை­யான எண்­ணங்­க­ளோடு இருப்­பதே இப்போரை வெல்­வ­தற்­கான வழி­யில் நம்மை இட்டுச் செல்லும்," என்று கூறி­யுள்­ளார் ராஷ்­மிகா.