'ரசிகர்களின் மனப்போக்கு மாறிவிட்டது'

'ரசிகர்களின் மனப்போக்கு மாறிவிட்டது'

2 mins read
b9b0d147-e4d1-4d86-9f33-982bfe256f55
தமன்னா -

திரைப்­ப­டங்­கள் தொடர்­பான ரசி­கர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களும் மனப்­போக்­கும் மாறி­யுள்­ள­தா­கச் சொல்­கி­றார் தமன்னா.

இப்­போது திரை­யு­ல­குக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"சினிமா மீதான ரசி­கர்­க­ளின் பார்வை இனி­மேல் மாறும். இத­னால் கலை­ஞர்­க­ளுக்­கான நட்­சத்­திர மதிப்­பீ­டும் மாறத் தொடங்கி இருப்­ப­தா­கக் கரு­து­கி­றேன்.

"படத்­தின் கதை நன்­றாக உள்ளதா என்­பதை உறுதி செய்த ­பி­றகே இன்­றைய ரசி­கர்­கள் படம் பார்க்­கி­றார்­கள். பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் ஒரு நடி­க­ருக்­குக் கிடைத்த ரசி­கர் கூட்­டம் இன்­றைய தலை­முறை நடி­கர்­க­ளுக்­குக் கிடைப்­பது கடி­னம்.

"நான் குற்­றப் பின்­னணி கொண்ட திகில் படங்­களில் அதி­கம் நடித்­த­தில்லை என்ற மனக்­குறை இருந்து வந்­தது.

அந்­தக் குறையை 'நவம்­பர் ஸ்டோரி' இணை­யத் தொடர் போக்கி உள்­ளது. நான் ஏற்று நடித்த கதா­பாத்­தி­ரம் மிகப்­பெ­ரும் சவா­லாக இருந்­தது," என்­கி­றார் தமன்னா.

இதற்­கி­டையே நவம்­பர் ஸ்டோரி இணை­யத் தொட­ருக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்­பும் விமர்­ச­ன­மும் கிடைத்­துள்­ள­தாம். இத­னால் தயா­ரிப்­புத் தரப்பு மிகுந்த உற்­சா­கத்­தில் இருப்­ப­தா­கத் தக­வல்.

அநே­க­மாக இந்த இணை­யத் தொட­ரில் பணி­யாற்­றிய அதே குழு மீண்­டும் இணை­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­ரித்­துள்­ளது. ஒரு­வேளை தமன்­னா­வின் கால்­ஷீட் கிடைத்­தால் அது உட­ன­டி­யாக சாத்­தி­ய­மா­க­லாம்.

"எனக்­கும் கூட ஒரு ரசி­கர் கூட்­டம் இருப்­பது மகிழ்ச்சி அளிக்­கிறது. இணை­யத் தொட­ரில் நடித்­த­தன் மூலம் இதை­யும் தெரிந்து கொண்­டேன்.

"நவம்­பர் ஸ்டோரி போன்ற சவா­லான கதை­கள், கதா­பாத்­தி­ரங்­களில் என்­னைத் தொடர்ந்து பார்க்க முடி­யும் என்ற உத்­த­ர­வா­தத்தை ரசி­கர்­க­ளுக்கு அளிக்­கி­றேன்," என்­கி­றார் தமன்னா.

"தந்­தை­யைக் காப்­பாற்ற வேண்­டிய இக்­கட்­டான தரு­ணத்­தில் ஒரு மக­ளாக நான் என்ன செய்­யப்போகி­றேன் என்­பதை முக பாவங்­க­ளி­லேயே வெளிப்­ப­டுத்த வேண்­டும்.

"அச்சு அச­லான நடுத்­தர குடும்­பத்­தைச் சேர்ந்த நாயகி எப்­படி அனைத்­தை­யும் எதிர்த்­துப் போரா­டு­கி­றாள் என்­பதை இயக்­கு­நர் கச்­சி­த­மாக காட்­சிப்­ப­டுத்தி உள்­ளார் என்­ப­து­தான் சரி. எனது நடிப்பு, உழைப்பு எல்­லாம் அதன் பிற­கு­தான் வரும். இந்­தக் கதை­யில் உள்ள யதார்த்­த­மான அம்­சங்­களும் அவற்றை இயக்­கு­நர் காட்­சிப்படுத்­தி­யுள்ள வித­மும் கவ­னிக்­கத்­தக்­கவை. வணிக ரீதி­யி­லும் இந்­தத் தொடர் வெற்­றி­பெற வேண்­டும் என விரும்­பு­கி­றேன்," என்கிறார் தமன்னா.