'பிக்பாஸ்' புகழ் கவின் நடித்துள்ள 'லிஃப்ட்' திரைப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாவதாகக் கூறப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்புத் தரப்பு விளக்கமளித்துள்ளது. அம்ரிதா ஐயர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வினித் வரபிரசாத் இயக்கி உள்ளார். அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீடு காணத் தயாராக உள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியால் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளனர். "ஜூன் 20ஆம் தேதி வரை காத்திருப்பதாக முடிவு செய்துள்ளோம். அப்போதும் திரையரங்குகளில் புதுப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலை இருப்பின் இணையத்தில் வெளியிடுவது குறித்து முடிவெடுப்போம். எங்களைப் பொறுத்தவரை இப்படம் திரையரங்கில் வெளியாக வேண்டும் என்பதே விருப்பம்," என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர்.
ஜூன் 20 வரை காத்திருக்கப்போகும் 'லிஃப்ட்' படக்குழு
1 mins read
-

