நடிக்கவில்லை: ஷ்ருதி தகவல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் அவரது மகள் ஷ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல எனத் தெரியவந்துள்ளது.
அந்தப் படத்தில் நடிக்கக் கேட்டு இதுவரை யாரும் தம்மை அணுகவில்லை என்கிறார் ஷ்ருதி.
"அப்படி ஒரு வாய்ப்பு இருக்குமானால் குறைந்த பட்சம் அப்பாவிடம் இருந்து எனக்குத் தகவல் வந்திருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை," என்று சொல்லும் ஷ்ருதி ஹாசன் தற்போது 'சலார்' என்ற தெலுங்குப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். விக்ரம்' நடிகர் கமல்ஹாசனின் 232வது படமாகும். இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.
நயன்தாரா படப் பாடல் வெளியீடு
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் 'நெற்றிக்கண்' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.
மிலந்த் ராவ் இயக்கும் இப்படத்துக்கு கிரிஷ் இசை யமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் 'இதுவும் கடந்துபோகும்' என்ற பாடலை விரைவில் வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் வெங்கட் சுபா காலமானார்
குணச்சித்திர நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா கிருமித்தொற்றால் காலமானார். 'மொழி', 'அழகிய தீயே', 'கண்ட நாள் முதல்' உட்பட பல படங்களில் நடித்தவர் வெங்கட் சுபா. தாடி வெங்கட் என்றும் இவரைக் குறிப்பிடுவர். சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

