இயக்குநர் கௌதம் மேனன் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'நரகாசூரன்' ஒருவழியாக பிரச்சினைகளைக் கடந்து நேரடியாக இணையத்தில் வெளியீடு காண உள்ளது. அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் எப்போதோ வெளியாகி இருக்க வேண்டும். எனினும் பணப்பிரச்சினை காரணமாக முடங்கிவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கௌதம் அறிவித்தார். அதன் பின்னர் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் இறுதி நேரத்தில் ஏதேனும் பிரச்சினை காரணமாக படம் தடைபடும். இந்நிலையில் பிரபல 'சோனி லைவ் ஓடிடி' நிறுவனம் 'நரகாசூரன்' வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக இணையத்தில் வெளியாகிறது 'நரகாசூரன்'
1 mins read
-

