தமிழ்த் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜனனி. இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிக்க வந்ததிலிருந்தே அவரது பெயரை ஜனனி ஐயர் என்றுதான் எழுதி வந்தார். திரையிலும் அப்படித்தான் போட்டு வந்தனர். எல்லோரும் அப்படித்தான் அவரை அழைத்து வந்தனர். ஆனால் தற்பொழுது திடீரென ஒரு மாற்றத்தைச் செய்துள்ளார். இந்த மாற்றத்தால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
"மாற்றம் ஒன்றே மாறாதது எனக் குறிப்பிட்டு, என்னுடைய பெயரிலிருந்த ஜாதியை நீக்குகிறேன். மேலும் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்," என தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் பலரும் ஜனனியின் இந்த ஜாதி துறப்பை வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். ரசிகர்களும் ஜனனியைப் பாராட்டி வருகின்றனர். ஆனால் ஏன் இந்த திடீர் ஜாதி துறப்பு என்பதை ஜனனி விளக்கவில்லை.

