திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
07c7132f-9caf-41b6-9065-8907372a920c
-
multi-img1 of 2

ஒரு மாதம் ஒரு பாடல் - படப்பிடிப்பு

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 90 விழுக்காட்டு படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. இறுதியாக இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் எடுக்கவேண்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் பங்கேற்கும் மிக பிரம்மாண்டமான பாடல் காட்சியும் ஒன்று. சுதந்திரப் போராட்ட பின்னணியில் அமைந்துள்ள இந்தப் பாடல், நூற்றுக்கணக்கான ஜூனியர் நடிகர்களை வைத்து படமாக்கப்பட இருக்கிறதாம். அதனால் அந்தப் பாடலைப் படமாக்குவதற்கு மட்டுமே ஒரு மாதம் ஒதுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ராஜமவுலி.

அசோக் செல்வனுக்கு

அடித்தது அதிர்ஷ்டம்

'ஓ மை கடவுளே' படத்தைத் தொடர்ந்து அசோக் செல்வன் பிரபல இயக்குநர் ஐவி சசியின் மகன் அனி சசி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்தப் படத்தில் நாசர், நித்யா மேனன், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் இந்தப் படம் தயாராகி உள்ளது. அதனைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் என மூன்று நாயகிகள் நடிக்க இருக்கின்றனர். வெங்கட் பிரபு, ராக்போர்ட் முருகானந்தத்திற்காக இந்தப் படத்தை இயக்குகிறார். மேலும் பிரேம்ஜி அமரன் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். அசோக் செல்வனுக்கு அடித்த அதிர்ஷ்டக் காற்று நம் பக்கம் வீசவில்லையே என்று வருத்தத்தில் இருக்கின்றனர் அவரின் சக நண்பர்கள்.