'என் குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா'

1 mins read
67db167b-b40c-4ecc-b3d7-ff4d2b1c79dc
-

'மேயாத மான்', 'ஆடை' படங்­களை இயக்­கி­ய­வர் ரத்ன குமார். இவ­ரது குடும்­பத்­தி­னர் அனை­வ­ரும் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்டு மீண்­டுள்­ள­னர்.

இது­பற்றி டுவிட்­ட­ரில், "15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்­பத்­தைச் சேர்ந்த 14 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோம்.

"அப்பா, பாட்டி, தம்­பி­யின் மனைவி, என் மாமி­யார் என சிலர் மருத்­து­வ­

ம­னைக்குச் சென்று தேறி­னர். சிலர் வீட்­டி­லி­ருந்தே உடல் தேறி­னர். ஒரு­வ­ருக்கு கொரோனா என்­ற­தும் முத­லில் எளி­தாக எடுத்­துக்­கொண்­டோம். பின்­னர் ஒவ்­வொ­ரு­வ­ராக பாதிக்­கப்­பட்­ட­போது அதிக மன உளைச்­ச­லுக்கு ஆளா­னோம். அந்த அபாய நிலை­யைக் கடந்து மீண்­டும் இயல்பு நிலைக்குத் திரும்­பிக்­கொண்டு இருக்­கிறது வீடு,'' எனப் பதி­விட்­டுள்­ளார்.