கொரோனா இரண்டாம் அலையில், 'ஓடிடி'யில் கரை ஒதுங்கியிருக்கும் மற்றுமொரு படம் 'எஃப்ஐஆர்'. விஷ்ணு விஷால் தயாரித்து நடித்திருக்கும் இப்படம் விரைவில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் விஷ்ணு விஷால் போலிசால் தேடப்படும் அபுபக்கர் அப்துல்லா என்ற முஸ்லிம் இளைஞனின் வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ மேனனும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

