தமன்னாவின் நடிப்பில் தமிழில் வெளியாகியுள்ளது 'நவம்பர் ஸ்டோரி' என்ற இணையத் தொடர். இதில் தமன்னா சிறப்பாக நடித்திருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். அதனால் மகிழ்ந்துபோன தமன்னா "திரையில் கவர்ச்சி நாயகி என்று மட்டுமே அறியப் பட்ட நான் இப்போது இணையத் தொடரில் என்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறேன்.
"ஆனால் '11 ஹவர்ஸ்' தொடர் வெற்றி பெற வில்லை. அதற்காக எனது நடிப்பை குறை சொல்ல முடியாது.
"எனது பணி மட்டுமே அனைத்துக்கும் பதிலளிக்கும். அடுத்தடுத்து நடிக்கும் தொடர்களில் இன்னும் வலு வான வேடங் களில் தைரிய மாக நடித்து என்னை நிரூபிப்பேன். இனி கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறேன்," என்றார் தமன்னா.

