கார்த்தியின் 'சகுனி', சூர்யாவின் 'மாஸ்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பிரணிதா சுபாஷுக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.
அதுபற்றி அவர் கூறுகையில், "இது காதல் மற்றும் பெரியவர்கள் ஏற்பாடு செய்த திருமணம். எனக்கு நிதின் ராஜுவை பல ஆண்டுகளாகத் தெரியும்.
"இரு குடும்பங்களின் அனுமதி பெற்று திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு எடுத்தோம். கொரோனா பிரச்சினையால் அனைத்து முன்னெச்
சரிக்கை நடவடிக்கைகளுடன் எளிமையாக திருமணம் செய்து கொண்டோம்," என்று கூறினார்.

