சசிகாந்த்: தனுஷ் மீது எனக்கு கோபம் இல்லை

3 mins read
b2e26cbf-6a4d-46c1-a293-b4f24f724864
-

தனுஷ், ஐஸ்­வர்யா லட்­சுமி இணைந்து நடித்­

தி­ருக்­கும் படம் 'ஜகமே தந்­தி­ரம்'. இந்­தப் படம் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யி­டா­மல் இணை­யத்­

த­ளத்­தில் வெளி­யா­கப்­போ­கிறது. அத­னால் தயா­ரிப்­பா­ளர் மீது நடி­கர் தனுஷ் கோபத்­தில் இருக்­கி­றார் என்ற செய்தி கோலி­வுட்­டில் பர­வ­லா­கப் பேசப்­பட்டு வந்தது. அது­பற்றி முதன்­மு­த­லாக இந்­தப் படத்­தின் தயா­ரிப்­பா­ளர் சசி­காந்த் விளக்­கம் அளித்­தி­ருக்­கி­றார்.

கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கத்­தில் தனுஷ், ஹாலி­வுட் நடி­கர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்­வர்யா லட்­சுமி, லால் ஜோஸ், கலை­ய­ர­சன், ராசுக்­குட்டி உள்­ளிட்ட பலர் நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள படம் 'ஜகமே தந்­தி­ரம்'. சந்­தோஷ் நாரா­ய­ணன் இசை­ய­மைக்க, ஸ்ரே­யாஸ் கிருஷ்ணா ஒளிப்­

ப­திவு செய்­துள்­ளார். 'ஒய் நாட் ஸ்டு­டி­யோஸ்' நிறு­வ­னம் தயா­ரித்­துள்­ளது.

கொரோனா அச்­சு­றுத்­த­லால் இந்­தப் படம் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கா­மல் நேர­டி­யாக 'நெட்­ஃப்­ளிக்ஸ் ஓடிடி' தளத்­தில் ஜூன் 18ஆம் தேதி வெளி­யா­க­வுள்­ளது. இந்­தப் படம் 'ஓடிடி'யில் வெளி­யா­கப் போகிறது என்று முடி­வா­ன­தி­லி­ருந்தே படம் தொடர்­பாக எந்­த­வொரு டுவிட்­டை­யும் தனுஷ் பதியாமல் இருந்­தார். படம் பற்றி எந்த ஒரு விளம்­ப­ர­மும் அவர் செய்­ய­வில்லை. இதன் மூலம் படத்­தின் தயா­ரிப்­பா­ளர் சசி­காந்த் - தனுஷ் மோதல் வெளியே தெரி­யவந்­தது.

தற்­பொழுது 'ஜகமே தந்­தி­ரம்' படத்­தை விளம்­ப­ரப்­ப­டுத்­தும் பணி­கள் மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன. இதில் தயா­ரிப்­பா­ளர் சசி­காந்­தி­டம் தனுஷ் உட­னான மோதல் குறித்­துக் கேட்­ட­போது, "கடந்த 4 மாத­மாக இது தொடர்­பாக சமூக வலைத்­த­ளங்­களில் பல­ரும் பேசி வருகிறார்கள். ஆனால், இது தொடர்­பாக நான் எந்­த­வொரு கருத்­தும் சொன்­ன­தில்லை.

"எதிர்­மறை பேச்­சு­கள் எதை­யும் காதில் போட்­டுக்­கொள்­ளா­மல் நான் தயா­ரித்திருக்கும் இந்­தப் படம் உலக அள­வில் போகப் போகிறது என்­ப­தில் மட்­டுமே கவ­ன­மாக இருக்­கி­றேன்.

"நானும் தனு­ஷும் பத்து ஆண்­டு­க­ளாக நண்­பர்­க­ளாக இருக்­கி­றோம். இந்­தப் பட விவ­கா­ரத்­தில் ஒரு கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டது.

"ஜகமே தந்­தி­ரம்' திரை­ய­ரங்­கு­களில் வந்­தால் நன்­றாக இருக்­கும் என்ற கருத்தை எடுத்து வைத்­தார் தனுஷ். அது ஒன்­றும் தவ­றான கருத்­தில்லை. அவ­ரு­டைய ரசி­கர்­கள் இந்­தப் படத்­தைத் திரை­ய­ரங்­கில் கொண்­டா­டு­வார்­கள். அது உண்­மை­தான்.

"ஆனால் ஓர் ஆண்­டாக பெரும் பொருட்­செ­லவில் எடுக்­கப்­பட்ட படத்தை வெளி­

யி­டா­மல் எத்தனை நாட்களாக காத்திருப்பது? வாங்கிய கடனுக்கு எவ்­வ­ளவு வட்டி கட்­டு­கி­றேன் என்­ப­து எனக்­குத்­தான் தெரி­யும். இது தொடர்­பாக நிறை­யப் பிரச்­சி­னை­கள் இருக்­கின்­றன.

"கொரோனா கால­கட்­டத்­தில் திரை­ய­ரங்­கு­கள் மீண்­டும் எப்­போது திறக்­கப்­படும் என்று யாருக்­கும் தெரி­யாது. எப்­போது இந்­தப் படம் வெளி­யா­கும் என்­றும் தெரி­யாத நிலை­யில்­தான் நான் இந்த முடி­வுக்கு வந்­தேன்.

"ஜகமே தந்­தி­ரம்' படத்­தின் மறுபக்­கத்­தைப் பாருங்­கள். இந்­தப் படம் சுமார் 200 மில்­லி­யன் சந்­தா­தா­ரர்­க­ளைக் கொண்ட 'நெட்­ஃப்­ளிக்ஸ்' இணை­யத்­த­ளத்­தின் மூலம் உலக அள­வில் வெளி­யா­க­வுள்­ளது.

"இந்­தப் படம் குறித்து உலகளவில் ரசிகர்கள் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஒரு தயா­ரிப்­பா­ள­ராக எனக்கு அது மிகுந்த மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது.

"யாரும் எதிர்­பா­ரா­மல் இந்த கொரோனா நோய்த்­தொற்­றால் பலர் பாதிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள். இப்­பொ­ழு­து­தான் மக்­கள் இந்த நோயின் தாக்­கத்தை உண­ரத் தொடங்கி இருக்­கி­றார்­கள். பல­ரும் வீட்­டிற்­குள்­ளேயே இருக்க விரும்­பு­கி­றார்­கள்.

"இந்­நி­லை­யில் இந்­தப் படம் 'ஓடிடி'யில் வெளி­யா­கும்­போது உல­கெங்­கும் இருக்கும் தனுஷின் ரசிகர்கள்

குடும்­பத்­து­டன் வீட்­டில் இருந்து இந்­தப் படத்தை ரசிப்­பார்­கள் என்­ப­தில் சிறி­தும் சந்­தே­கம் இல்லை. விரை­வில் இந்­தப் படத்­திற்­கான வர­வேற்பை தனு­ஷும் அவ­ரது ரசி­கர்­களும் உணர்­வார்­கள்," என்று கூறி­னார்.

இந்­தப் படத்­தில் நாய­கி­யாக நடித்­தி­ருக்­கும் ஐஸ்­வர்யா லட்­சுமி,

"ஆக்­‌ஷன்' படத்­தில் நடித்­த­போது நான் சொந்­தக் குர­லில் பேசி­யி­ருந்­தேன். ஆனால் அது எனக்கு அவ்­வ­ள­வாக திருப்தி ஏற்­ப­ட­வில்லை. அதன்­பி­றகு நன்­றா­கப் பயிற்சி எடுத்து 'ஜகமே தந்­தி­ரம்' படத்­தில் என்­னு­டைய வச­னங்­களை நானே பேசி இருக்­கி­றேன். அது எனக்கு முழு திருப்­தியை அளித்­தி­ருக்­கிறது. 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தி­லும் நான் சொந்­தக் குர­லில்­தான் பேசப் போகி­றேன்," என்று கூறியிருக்கிறார்.