திரைச்செய்திகள்

திரைச்செய்திகள்

2 mins read
d57c6dc0-a5b8-4ed5-be91-83c7e08d998b
-
multi-img1 of 3

பாடல் வரிகளால்

பாடகரின் உருவப்படம்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நேற்று 75வது பிறந்தநாள். அவரது மறைவுக்குப் பிறகு வரும் முதல் பிறந்தநாளில் திரைப் பிரபலங்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் அவருடைய பிறந்தநாளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் சேலத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவர் பாடிய பாடல்களில் புகழ்பெற்ற 1,270 மிகச்சிறந்த பாடல்களின் முதல் வரியை எழுதி அவரின் உருவத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

'பீர்பால்' மறுபதிப்பில் சாந்தனு

கன்னட துப்பறியும் படமான 'பீர்பால்' தமிழில் மறுபதிப்பாகிறது. கிருஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். சாந்தனு கதாநாயகனாக நடிக்க, பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள் தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 'மதியாளன்' என்று தமிழில் பெயரிடப்பட்டுள்ளது. கண்ணன் ரவி தயாரிக்கிறார். தற்போது 'ராவண கூட்டம்' என்ற படத்தில் சாந்தனு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு 'மதியாளன்' படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

முதல் இடத்தில் 'திரிஷ்யம்'

'ஐஎம்டிபி' நிறுவனம் அவ்வப்போது அந்தந்த ஆண்டில் வெளியாகும் படங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியான 'திரிஷ்யம்-2' திரைப்படம், தற்போதைய 'ஐஎம்டிபி' தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களை ஒப்பிடும்போது 8.8 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பெற்றிருக்கிறது 'திரிஷ்யம் 2'.