'ஆண்ட்ரியாவை சிரமப்படுத்திவிட்டேன்'

1 mins read
99beeb9d-095c-45bb-9bb9-91574e82bfda
-

மிஷ்­கின் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'பிசாசு-2' படத்­தில் நாய­கி­யாக நடித்து வரு­கி­றார் ஆண்ட்­ரியா.

இந்­தப் படத்­துக்­காக அவரைப் படாதபாடு படுத்­தி­விட்­ட­தாக கூறுகிறார் மிஷ்கின்.

அதன் பல­னாக ஆண்ட்ரி­யா­வின் நடிப்பு அரு­மை­யாக இருந்­தது என்று பாராட்­ட­வும் செய்­கி­றார்.

'பிசாசு' படத்­தின் முதல் பாகத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தது. இதை­ய­டுத்து உரு­வா­கும் இரண்­டாம் பாகத்­தி­லும் பிசா­சு­தான் முக்­கி­ய கதா­பாத்­தி­ர­மாம். இந்தப் பாகத்­தி­லும் அன்பு, பாசம் கருணை ஆகி­ய­வற்­று­டன் சிறி­தாக ஒரு நல்ல செய்­தி­யும் இடம்­பெற்­றி­ருக்­கும் என்கி­றார் மிஷ்­கின்.

"அதே­ச­ம­யம் இரு பாகங்­க­ளி­லுமே வெவ்­வேறு கதை­க­ளைத்­தான் சொல்லி இருக்­கி­றேன். இரண்­டுக்­கும் எந்த வகை­யி­லும் தொடர்பு இல்லை. ஆண்ட்­ரி­யா­வின் திரை­வாழ்க்­கை­யில் இது முக்­கி­ய­மான பட­மாக அமை­யும். அந்­த­ள­வுக்கு தன்னை வருத்­திக்­கொண்டு நடித்­துள்­ளார். என் பங்­குக்கு நானும் அவரை மிக­வும் சிர­மப்­ப­டுத்தினேன்.

"இது பெரி­ய­வர்­க­ளுக்­கான திகில் படம்­தான். எனவே படம் பார்ப்­ப­வர்­களை நிச்­ச­யம் மிரள வைக்­கும். இது­போன்ற கதை­களில் நடிக்க நல்ல அனு­ப­வ­மும் திற­மை­யும் மட்­டும் போதாது. கடு­மை­யாக உழைக்­க­வும் வேண்­டும். ஆண்ட் ரியா அவ்­வாறு உழைப்­பைக் கொட்டி இருக்­கி­றார்," என்­கி­றார் மிஷ்­கின்.