ஏ.எல்.விஜய்யின் அடுத்த படத்தில் நான்கு நாயகிகள்

கொரோனா ஊர­டங்­கில் நான்கு நாய­கி­களை வைத்து படம் இயக்கி முடித்­துள்­ளார் இயக்­கு­நர்

ஏ.எல்.விஜய்.

தமிழ்த் திரை­யு­ல­கின் முன்­னணி இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ரான ஏ.எல்.விஜய் இயக்கி முடித்­துள்ள 'தலைவி' திரைப்­ப­டம் ஏப்­ரல் 23ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கும் என்று அறி­வித்து இருந்­த­னர். ஆனால் கொரோனா தொற்று கார­ண­மாக திரை­ய­ரங்­கி­னில் வெளி­யா­கும் தேதி தள்ளிவைக்­கப்­பட்­டது. கொரோனா ஊர­டங்கு முடி­வ­டைந்த பின்­னர் திரை­ய­ரங்­கு­க­ளில்­தான் இந்­தப் படத்தை வெளி­யிட வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக உள்­ள­னர் படக்­கு­ழு­வி­னர்.

இந்­தப் படத்­தில் அர­விந்த் சாமி எம்.ஜி.ஆர். கதா­பாத்­தி­ரத்­தி­லும் ப்ரி­யா­மணி சசிகலா வேடத்­தி­லும் நடித்­துள்­ள­னர். இவர்­க­ளு­டன் சமுத்­தி­ர­கனி, பாக்­ய­ஸ்ரீ, மது­பாலா உள்­ளிட்­டோ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர்.

இந்­தப் படத்­திற்கு ஜி.வி.பிர­காஷ் இசை­ய­மைத்திருக்கி­றார். 'பாகு­பலி' படத்­தின் கதா­சி­ரி­யர் கே.வி.விஜ­யேந்­திர பிர­சாத் கதை எழு­தி­யுள்­ளார். தமிழ், இந்தி உள்­ளிட்ட மொழி­களில் இந்­தப் படம் உரு­வா­கி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், 'தலைவி' திரைப்­ப­டத்­தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்­தின் வேலை­க­ளை­யும் முடித்­துள்­ளார் இயக்­கு­நர் விஜய்.

எப்­போ­துமே குறைந்த செல­வில் திட்­ட­மிட்ட நாட்­களில் ஒரு படத்தை இயக்கி முடித்­து­வி­டும் விஜய், இந்த கொரோனா

ஊர­டங்கு சம­யத்­தில் 4 நாய­கி­களை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்­துள்­ளார்.

இந்தப் படத்­தில் நிவேதா பெத்­து­ராஜ், மஞ்­சிமா மோகன், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான் ஆகி­யோர் நடித்­துள்­ளார். பிர­பல தெலுங்கு நடி­கர் விசாகா சென் சிறப்பு தோற்­றத்­தில் நடித்­தி­ருக்­கி­றார். இந்­தப் படத்­துக்கு 'அக்­டோ­பர் 31 லேடீஸ் நைட்' என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி­களில் இந்­தப் படம் தயா­ராகி, 'ஓடிடி'யில் வெளி­யாக உள்­ளது. எந்த இணை­யத்­ த­ளம் என்று முடி­வா­ன­தும் படத்­தின் முன்­னோட்­டக் காட்சி வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மேலும் 'தலைவி' திரைப்­ப­டத்­திற்கு முன்­பா­கவே 'ஓடிடி'யில் இந்த படம் வெளி­யா­க­வுள்­ளது என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!