வில்லங்கமான கதையில் அனுஷ்கா

1 mins read
3ae8cbe5-8816-4623-837b-944a3f0085e6
-

அனுஷ்கா ஒரு வில்­லங்­க­மான காதல் கதை கொண்ட படத்­தில் நடிக்க ஒப்­புக்கொண்­டி­ருக்­கி­றா­ராம். அந்த படத்­திற்கு 'மிஸ் ஷெட்டி மிஸ்­டர் பாலி­ஷெட்டி' என்று பெயர் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

'பாகு­பலி 2' படத்­திற்கு பிறகு அவர் நடித்த 'சைலன்ஸ்' படம் 'ஓடிடி'யில் வெளி­யாகி படு­தோல்வி அடைந்­தது. அத­னால் மன­மு­டைந்து போன அனுஷ்கா சில காலம் நடிக்­கா­மல் இருந்­தார். இனி­மேல் கதை­யைத் தேர்வு செய்­யும்­போது கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று முடிவு செய்­தார். ஆனால் அவர் தற்­பொ­ழுது தேர்ந்­தெ­டுத்து இருக்­கும் படம் வில்­லங்­க­மான கதை­க் கருவைக் கொண்டுள்ளது.

40 வயது பெண்­ணுக்­கும் இரு­ப­து­களில் இருக்­கும் ஆணுக்­கும் இடை­யே­யான காதல் பற்­றிய பட­மாக உரு­வாக இருக்­கிறது. அனுஷ்­கா­விற்கு ஜோடி­யாக பிர­பல தெலுங்கு நடி­கர் நவீன் பாலி­ஷெட்டி நடிக்­கி­றார்.

நவீன், அனுஷ்­காவை விட சிறி­ய­வர். இந்த மாத இறு­தி­யில் படப்­பி­டிப்பு துவங்க இருக்­கிறது. வெளி­நாட்­டுக்குச் சென்று உடல் எடையை குறைத்­து­ வந்த அனுஷ்கா தற்­போது மீண்­டும் எடை அதி­க­ரித்து விட்­டார்.

அவர்

குண்­டாக

இருக்­கும் புகைப்­ப­டம் அண்­மை­யில் வெளி­யாகி பல­வி­த­மான விமர்சனங்

க­ளைப் பெற்று வரு­கிறது.