தந்தையும் மகனும் இணையும் 'சீயான் 60'

1 mins read
c2992bba-05e4-4299-88bf-e2d38a7dd6d4
-

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'சீயான் 60'. இந்தப் படத்தில் விக்ரமும் அவர் மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் விக்ரம் முழு நேர வில்லனாகவும் துருவ் விக்ரம் நாயகனாகவும் நடிக்கிறார்கள். இதுவரை 'சீயான் 60' படத்தின் 50 விழுக்காட்டு படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தை மகனைத் தவிர பாபி சிம்ஹாவும் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரமுடன் இணைந்து சிம்ரன் நடிக்கிறார். இதற்கு முன் பாலா இயக்கிய 'பிதாமகன்', கவுதம் மேனன் இயக்கிய 'துருவ நட்சரத்திரம்' படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.