திரையரங்கில்தான் கீர்த்தியின் ‘குட்லக் சகி’

கீர்த்தி சுரேஷ் நடித்­தி­ருக்­கும் 'குட்­லக் சகி' திரைப்

­ப­டம் 'ஜீ 5' தளத்­தில் வெளி­யா­கும் என்ற செய்தி சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­யது. அதிர்ச்சி அடைந்த படத்­தின் தயா­ரிப்­பா­ளர் கொரோனா ஊர­டங்­கிற்­குப் பிறகு திரை­ய­ரங்­கில்­தான் படம் வெளி­யா­கும் என்று மறுப்பு தெரி­வித்து இருக்­கி­றார்.

இது­பற்றி தயா­ரிப்­பா­ளர் சுதிர் சந்­திர பத்ரி கூறு­கை­யில், "குட்­லக் சகி படத்­தில் கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜெக­பதி ­பாபு ஆகி­யோர்

நடித்­தி­ருக்­கின்­ற­னர். நரேஷ் குகு­னூர் இயக்­கி­யுள்ள இப்­ப­டத்தை தில் ராஜு­ என்­னு­டன் இணைந்து தயா­ரித்­துள்­ளார். இந்­தப் படத்­திற்கு தேவி­ஸ்ரீ பிர­சாத் இசை­

ய­மைத்­துள்­ளார். விளை­யாட்டு, காதல், நகைச்­சுவை என அனைத்­தும் கலந்த ஒரு கல­வை­யான திரைப்­ப­ட­மாக இது உரு­வாகி உள்­ளது. ஜெக­பதி பாபு

முக்­கி­ய­ க­தா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார்.

"இந்தப் படத்­தின் முன்­னோட்­டக் காட்சி 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே வெளி­

யி­டப்­பட்­டது. ஆனால் படத்­தின் வெளி­யீடு தொடர்ந்து பல்­வேறு கார­ணங்களால் தள்­ளிப்­போய்க் கொண்டே இருந்­தது. இறு­தி­யில் படப்­பி­டிப்பு அனைத்­தும் முடி­வ­டைந்த நிலை­யில் படத்தை சென்ற மாதம் வெளி­யி­ட­லாம் என்ற முடி­வுக்கு வந்த சம­யத்­தில் கொரோனா தாக்­கத்­தால் திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்­டன.

"இந்­நி­லை­யில், 'குட்­லக் சகி' திரைப்­

ப­டம் 'ஓடிடி'யில் வெளி­யாக உள்­ள­தாக இணை­யத்­தில் செய்­தி­கள் வெளி­வந்­துள்­ளன. அந்த தக­வ­லில் உண்­மை­யில்லை. விரை­வில் படம் திரை­ய­ரங்குகளில்­ தான் வெளி­யா­கும். அதை நாங்­களே அறி­விப்­போம். அது­வரை அனை­ வ­ரும் வீட்­டில் பாது­காப்­பாக இருங்­கள்," என்று கூறி வேக­மாக பர­விய வதந்­திக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும் வித­மாக தயா­ரிப்­பா­ளர் அறிக்கை வெளி­யிட்டு இருக்­கி­றார்.

கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்­திரி கதா­பாத்­தி­ரத்­தில் 'நடி­கை­யர்

தில­கம்' படத்­தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு தொடர்ந்து குடும்­ப­ப்பாங்­கான கதா­பாத்­தி­ரங்­க­ளி­லேயே நடித்து வந்­தார். அரை­குறை உடை­யில் கவர்ச்­சி­யாக நடிக்க வந்த வாய்ப்­பு­களை உத­றி­னார்.

ஆனால், கீர்த்தி சுரேஷ் நடித்து அண்­மை­யில் திரைக்கு வந்த படங்­கள் எதிர்­பார்த்த அளவு வசூல் பெற­வில்லை. மேலும் 'ஓடிடி'யில் வெளி­யான அவ­ரது 'பென்­கு­யின்' பட­மும் ரசி­கர்­க­ளி­டையே வர­வேற்­பைப் பெற­வில்லை. உடல் எடையைக் குறைத்­த­தில் அவ­ரு­டைய தோற்­றமே மாறிப்­போ­னது. அதனால் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார் கீர்த்தி சுரேஷ்.

தெலுங்­கில் இவர் நடித்து வெளி­வந்த 'ரங்­குதே' படம், ஓர­ள­விற்கு வர­வேற்­பைப் பெற்­றது. காதல்

பட­மாக வெளி­வந்த இந்தப் படத்­தில் படுக்கை அறை காட்­சி­களில் நடித்து பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளார் கீர்த்தி சுரேஷ்.

'கீர்த்தி சுரேஷா இப்­படி நடித்­தி­ருக்­கி­றார்?' என்று ஒருசிலர் விமர்­சித்­தா­லும் கீர்த்தி சுரே­ஷின் ரசி­கர்­கள் அவர் திடீ­ரென கவர்ச்­சிக்கு மாறி­ய­தற்கு

உற்­சாக வர­வேற்பு அளித்­துள்­ள­னர்.

'ரங்­குதே' படத்­தில் நடி­கர் நிதி­னு­டன் கீர்த்தி சுரேஷ் நெருக்­க­மாக நடித்த காட்­சி­க­ளின்

படங்­கள் தற்­பொ­ழுது சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லாக பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

இதன் மூலம் கவர்ச்சி காட்டி நடிக்க நானும் தயார் என கீர்த்தி சுரேஷ் மறை­மு­க­மாக சொல்­

வ­தாக திரைத்­து­றை­யில் பேச்சு அடி­பட்­டது.

தமி­ழில் ரஜி­னி­காந்த்­து­டன் 'அண்­ணாத்த' படத்­தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்­கில் மகேஷ் பாபு­வின் 'சர்­காரு வாரி பாட்டா'

படத்­தி­லும் நடித்து வரு­கி­றார்.

இவற்­று­டன் கீர்த்தி சுரேஷ் மலை­யா­ளத்­தில் 'அர­பிக்­க­ட­லிண்டே சிம்­ஹம்' என்ற சரித்­திர கதை­யில் மோகன்லாலு­டன் இணைந்து நடித்­துள்­ளார்.

கடற்­படைகளின் உதவியுடன் ஆங்­கி­லே­யர்­களை எதிர்த்துப் போரா­டிய குன்­ஹாலி மரைக்­கா­ய­ரின் வாழ்க்­கையை மைய­மாக வைத்து தயா­ராகி உள்ள இப்­ப­டத்­தில் கீர்த்தி சுரே­ஷின் தோற்­றம் வெளி­யாகி உள்­ளது.

அதில் கீர்த்தி சுரேஷ் சரித்­திர காலத்து ஆடை ஆப­ர­ணங்­கள் அணிந்து இருக்­கி­றார். புகைப்­ப­டத்­தில் அவர் ராணி­போல் இருப்­ப­தாக ரசி­கர்­கள் வலைத்­த­ளங்­களில் பாராட்டி வரு­கின்­ற­னர். அந்த புகைப்­ப­டங்­கள் பர­வ­லாக பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

நடிகை கீர்த்தி சுரேஷ் அஜய் தேவ்கனின் பாலிவுட் படமான 'மைதான்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக உடல் இளைத்து ஒல்லியாக மாறினார். ஆனால், கடைசி நேரத்தில் கீர்த்தி சுரேஷை நீக்கி விட்டு பிரியாமணியை அந்தப் படத்தில் படக்குழு ஒப்பந்தம் செய்தது.

அதனால் மன அமைதி இழந்த கீர்த்தி சுரேஷ் தினமும் யோகா செய்யத் தொடங்கி இருக்கிறார். யோகா செய்வதால் மன அமைதி கிடைப்பதாக பதிவிட்டு, யோகா செய்யும் படங்களையும் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!