கடனை அடைக்க ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம்

கடனை அடைக்க ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம்

1 mins read
9d6f8b53-5660-4218-8f0d-11eaf2018cda
-

சிவகார்த்திகேயன் தான் நடித்த படங்கள் வெளியாவதற்கு படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் கடனை அடைக்க முயன்று கடனாளியானார். தற்பொழுது அவர் பட்ட கடனை அடைத்தே தீரவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.

அவரின் நிலையைப் பயன்படுத்திக் கொண்ட 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம், "இரண்டு ஆண்டுகளில் எங்கள் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கிறீர்களா?" என்று கேட்க, தற்போதிருக்கும் சூழலை மனதில் வைத்து சிவகார்த்திகேயனும் அதற்கு சம்மதித்து இருக்கிறார். ஒரு படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். மொத்தம் ஐந்து படத்திற்கு ரூ.75 கோடி சம்பளம் கிடைக்கும். அதில் ரூ.70 கோடி கடனுக்கே போய்விடும் என்று கூறப்படுகிறது.