அதிக சம்பளம் வாங்கிய சமந்தா

அதிக சம்பளம் வாங்கிய சமந்தா

1 mins read

தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடரில் நடித்ததற்காக நடிகை சமந்தா சினிமாவைவிட அதிக சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நடித்த மனோஜ் பாஜ்பாயி ரூ.10 கோடியும் சமந்தா 3 அல்லது 4 கோடி ரூபாயும் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பெரிய திரையைவிட இணையத் தொடர்களில் அதிக சம்பளம் கிடைப்பதால் நடிகைகள் பலரும் இணையத் தொடர்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.