வாணி: திறமைதான் காரணம்

கவர்ச்சி உடை, ஆர­வார நட­னம் என்­றெல்­லாம் செய்து ரசி­கர்­க­ளைக் கவர்­வ­தில் வாணி போஜ­னுக்­குப் பெரி­தாக ஆர்­வ­மில்லை.

தனக்­கேற்ற குடும்­பப் பாங்­கான கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் சுவா­ர­சி­ய­மான கதை­க­ளை­யும் மட்­டுமே தேர்வு செய்து நடித்து வரு­கி­றார். அண்­மை­யில் ராதா­மோ­கன் இயக்­கத்­தில் இவ­ரும் வைபவ்­வும் இணைந்து நடித்த ‘மலே­சியா டு அம்­னீ­சியா’ திரைப்­ப­டம் வெளி­யாகி உள்­ளது. படத்­துக்கு எதிர்­பார்த்­த­ப­டியே நல்ல வர­வேற்பு கிடைத்­தி­ருப்­ப­தால் உற்­சா­கத்­தில் உள்­ளார் வாணி.

“இந்த அள­வுக்­குப் பாராட்டு கிடைக்­கும் என உண்­மை­யா­கவே நான் எதிர்­பார்க்­க­வில்லை. அத­னால் எனது மகிழ்ச்­சிக்­கும் அள­வில்லை. கூடு­மா­ன­வரை நான் ஒப்­ப­னையை நம்­ப­மாட்­டேன். அதே­ச­ம­யம் குறிப்­பிட்ட ஒரு கதா­பாத்­தி­ரத்­துக்கு அதிக ஒப்­பனை தேவை என்று சொன்­னால் அது கூடாது என அடம்­பி­டிப்­ப­தும் எனது வழக்­க­மல்ல.

“ஆனால் இந்­தப் புதிய படத்­தைப் பொறுத்­த­வரை பெரும்­பா­லும் நாயகி வீட்­டில்­தான் இருப்­பாள். அதி­லும் சமை­ய­ல­றை­யில் அதிக நேரம் செல­வி­டும் ஒரு நடுத்­தர வர்க்­கத்­துப் பெண்­ணாக நடித்­தி­ருக்­கி­றேன். எனவே, அதிக ஒப்­பனை, சிகை­ய­லங்­கா­ரம் என்று செய்துகொண்­டி­ருந்­தால் ஒரு­வித செயற்­கைத்­தன்மை வந்­து­வி­டும். அத­னால் இயக்­கு­ந­ரின் அனு­ம­தி­யோடு இரண்­டை­யுமே தவிர்த்­தேன்.

“அத­னால்­தான் என் நடிப்பு எடு­பட்­ட­தாக தோன்­று­கிறது. உண்­மை­யில் அந்த இயல்­பான தோற்­றத்­துக்­கும் நடிப்­புக்­கும்­தான் இவ்­வ­ளவு பாராட்டு,” என்­கி­றார் வாணி.

கதைப்­படி இப்­ப­டத்­தின் நாய­கன் வைபவ் திரு­ம­ணத்­துக்­குப் பிற­கும் வேறொரு பெண்­ணு­டன் ரக­சி­யத் தொடர்பு வைத்­தி­ருப்­பார். இந்த உண்மை தெரிந்தபிற­கும் அவரை மன்­னித்து ஏற்­றுக்கொள்­வார் வாணி. இவ்­வ­ளவு பெருந்­தன்­மை­யு­டன் இருப்­பது சரி­தானா, சாத்­தி­யம்­தானா என்று சமூக வலைத்­த­ளங்­களில் கேள்வி எழுந்­துள்­ளது. இதற்கு வாணி பாந்­த­மாகப் பதி­ல­ளித்­துள்­ளார்.

“குடும்­பத்தின் நலன் கருதி கண­வ­னைத் தண்­டிக்க முடி­யா­மல் சகித்­துக்கொள்­ளும் பெண்­கள் பலர் இருக்­கி­றார்­கள். அதே­ச­ம­யம் துரோ­கத்­தைத் தாங்­க­மு­டி­யா­மல் கண­வ­னைத் தூக்கி எறி­ப­வர்­களும் இருக்­கி­றார்­கள். உண்­மை­யில் இந்­தக் காலத்­தில் பெரும்­பா­லான பெண்­கள் தற்­சார்பு கொண்­ட­வர்­கள்.

“கண­வனை மன்­னிக்­கும் பெண்­கள் அன்­புக்­கும் காத­லுக்­கும் உள்ள முக்­கி­யத்­து­வத்தை உணர்த்­து­கி­றார்­கள். ஆனால் அதையே சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு கண­வன்­மார்­கள் செயல்­ப­டக்­கூ­டாது என்­ப­து­தான் என் கருத்து,” என்று சொல்­லும் வாணி போஜன், சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டும் அவ­ரது புகைப்­ப­டங்­க­ளுக்குப் பலத்த வர­வேற்பு உள்­ளது.

ஒவ்­வொரு படத்­துக்­கும் லட்­சக்­க­ணக்­கில் ‘லைக்ஸ்’கள் கிடைக்­கி­ற­தாம். அதே­ச­ம­யம் சமூக அக்­க­றை­யு­டன் சில விஷ­யங்­கள் குறித்­துக் கருத்து தெரி­விக்­கும்­போது அதற்­கான பின்­னூட்­டங்­கள் குறை­வா­கவே உள்­ள­ன­வாம். இது தமக்கு வருத்­த­ம­ளிப்­ப­தாகச் சொல்­கி­றார்.

“அனை­வ­ருக்­குமே சமூக அக்­கறை என்­பது வேண்­டும். பொழு­து­போக்­கிற்­காக மட்­டுமே சமூக வலைத்­த­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்­தக்­க­டாது. அத்­த­கைய போக்­கும் மன­நி­லை­யும் மாற­வேண்­டும்,” என்று வேண்­டு­கோள் விடுக்­கி­றார்.

சினிமா மட்­டுமே உல­கம் அல்ல என்­றும் ரசி­கர்­கள் அவ்­வாறு நினைப்­ப­தில்லை என்­றும் கூறு­கி­றார். தொலைக்­காட்சி, சினிமா ஆகி­ய­வற்­றைக் கடந்து இன்று பல்­வேறு துறை­களில் ஏரா­ள­மான நட்­சத்­தி­ரங்­கள் உரு­வாகி உள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், சினிமா நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு இணை­யான புக­ழு­டன் அல்­லது அவர்­களை விட அதி­கம் கொண்­டா­டப்­படும் பலர் உரு­வாகி இருப்­ப­தா­கச் சுட்­டிக்காட்­டு­கி­றார்.

“எனவே சினிமா நட்­சத்­தி­ரங்­களை மட்­டுமே ரசி­கர்­கள் கொண்­டா­டு­வார்­கள் என நான் நம்­ப­வில்லை. இனி­மேல் திற­மைக்­கும் உழைப்­புக்­கும்­தான் மரி­யாதை கிடைக்­கும் என நம்­பு­கி­றேன்,” என்று சொல்­லும் வாணிக்கு கைக்­க­டி­கா­ரங்­கள் என்­றால் ரொம்­பப் பிடிக்­கு­மாம். அதே­போல் பல­வி­த­மான நவீன ஆடை­களை அணி­ய­வும் விரும்­பு­கி­றார்.

“இந்த அள­வுக்கு நான் வளர்ந்­தி­ருப்­ப­தற்கு எனது அழகு கார­ண­மல்ல. திற­மை­தான் என்னை இவ்­வ­ளவு தூரம் அழைத்து வந்­தி­ருக்­கிறது. தவிர, திற­மை­யைக் கடந்த தன்­னம்­பிக்­கை­யும் எனது வெற்­றிக்­குக் கார­ணம் என நினைக்­கி­றேன். எனது பெய­ரைக் கேட்டு நான் வட இந்­தி­யப்­பெண் என்று சிலர் கரு­து­கி­றார்­கள். உண்­மை­யில் நான் தமிழ்ப் பெண்­தான். ஊட்­டி­யில் உள்ள படு­காஸ் இனத்­தைச் சேர்ந்­த­வள். கொஞ்­சம் கன்­ன­டம் கலந்த தமி­ழில் பேசு­வேன். நான் ஏற்று நடிக்­கும் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு நானே பின்­னணிக் குரல் கொடுக்­கி­றேன்,” என்கிறார் வாணி போஜன்.

, :   

வாணி போஜன்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!