இந்தி நடிகரைக் காண 700 கி.மீ. நடந்து சென்ற ரசிகர்

இந்தி நடிகரைக் காண 700 கி.மீ. நடந்து சென்ற ரசிகர்

1 mins read
a506670b-a518-45fc-a760-8c0d19315024
நடிகர் சோனு சூட்டுடன் ரசிகர் வெங்கடேஷ். படம்: இந்திய ஊடகம் -

இந்தி நடிகர் சோனு சூட்டின் ரசிகர் ஒருவர் அவரைச் சந்திப்பதற்காக 700 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். ரசிகரின் இந்த அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனாராம் சோனு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சமூகச் சேவை இப்போதும் நீடித்து வருகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தார் சோனு சூட். இதனால் பயனடைந்த அத்தொழிலாளர்கள் தங்கள் அபிமான நடிகருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில் கட்டி வணங்குகின்றனர்.

இந்நிலையில், சோனுவின் தீவிர ரசிகர் ஒருவர் அவரை நேரில் சந்திக்க விரும்பி உள்ளார். இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற அந்த ரசிகர் சொந்த ஊரில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்து மும்பை சென்றடைந்துள்ளார்.

சோனுவைச் சந்தித்தபோது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தூரம் நடந்து வந்ததாகச் சொன்னாராம். அதைக் கேட்டு நெகிழ்ந்து போனார் சோனு.

அந்த ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய பின்னர் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி ரசிகரை வழியனுப்பி வைத்துள்ளார் சோனு.

குறிப்புச் சொற்கள்