ரசிகரின் அன்பில் நெகிழ்ந்த சோனு

1 mins read
dc31e761-a4a3-4a54-9638-00efd0822dba
ரசிகருடன் சோனு சூட். -

இந்தி நடி­கர் சோனு சூட்­டின் ரசி­கர் ஒரு­வர் அவ­ரைச் சந்­திப்­ப­தற்­காக 700 கிலோ­மீட்­டர் நடந்து சென்­றுள்­ளார். ரசி­க­ரின் இந்த அன்­பைக் கண்டு நெகிழ்ந்து போனா­ராம் சோனு.

கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டுள்ள ஆயி­ரக்­க­ணக்­கான ஏழை மக்­க­ளுக்­குப் பல்­வேறு உத­வி­க­ளைச் செய்து வரு­கி­றார் நடி­கர் சோனு சூட். கடந்த ஆண்டு தொடங்­கிய இந்த சமூ­கச் சேவை இப்­போ­தும் நீடித்து வரு­கிறது.

புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் சொந்த ஊர் திரும்­பு­வ­தற்கு சிறப்பு விமா­னங்­களை ஏற்­பாடு செய்­தார் சோனு சூட். இத­னால் பய­ன­டைந்த அத்­தொழி­லா­ளர்­கள் தங்­கள் அபி­மான நடி­க­ருக்கு நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் கோவில் கட்டி வணங்­கு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், சோனு­வின் தீவிர ரசி­கர் ஒரு­வர் அவரை நேரில் சந்­திக்க விரும்பி உள்­ளார். இதை­ய­டுத்து ஹைத­ரா­பாத்­தைச் சேர்ந்த வெங்­க­டேஷ் என்ற அந்த ரசி­கர் சொந்த ஊரில் இருந்து சுமார் 700 கிலோ­மீட்­டர் தூரத்தை நடந்தே கடந்து மும்பை சென்­ற­டைந்­துள்­ளார்.

சோனு­வைச் சந்­தித்­த­போது அவ­ரு­டன் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்ள வேண்­டும் என்­ப­தற்­கா­கவே இவ்­வ­ளவு தூரம் நடந்து வந்­த­தா­கச் சொன்­னா­ராம். அதைக் கேட்டு நெகிழ்ந்து போனார் சோனு.

அந்த ரசி­க­ரின் விருப்­பத்தை நிறை­வேற்­றிய பின்­னர் சொந்த ஊர் செல்ல ஏற்­பாடு செய்­துள்­ளார்.

இனி இது­போன்ற செயல்­களில் ஈடு­ப­டக்­கூடாது என்­றும் குடும்­பத்­தைக் கவ­னிக்க வேண்­டும் என்­றும் அறி­வுரை கூறி அவரை வழி­ய­னுப்பி வைத்­துள்­ளார்.