மகன் முகெனின் காதல் கைகூட உதவும் தந்தை பிரபு: ‘வேலன்’ படத்தில் சுவாரசியம்

'பிக்­பாஸ்' நிகழ்ச்­சி­யில் பெற்ற வெற்­றி­யின் மூலம் பிர­ப­ல­மான முகென்­ராவ் தமி­ழில் சில படங்­களில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார். அவற்­றுள் முத­லில் திரைக்கு வரு­கிறது 'வேலன்'.

அறி­முக இயக்­கு­நர் கவின் இயக்­கி­யுள்ள இப்­ப­டத்­தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்­ளிட்­டோர் நடித்­துள்­ள­னர். முகென் ஜோடி­யாக மீனாட்சி நடித்­துள்­ளார். இவர் ஏற்­கெ­னவே 'கென்­னடி கிளப்' படத்­தில் நடித்­த­வர்.

தந்தை தமது பகை­யில் வெற்றி பெற வேண்­டும் என்­ப­தற்­காக, தனது காத­லி­யையே இழக்­கத் துணி­கி­றான் கதா­நா­ய­கன். மக­னு­டைய காதல் கைகூட பகை­யா­ளி­யி­டம் தோற்­றுப் போக தயா­ரா­கி­றார் தந்தை.

இறு­தி­யில் யாரு­டைய நோக்­கம் வெற்றி பெறு­கிறது என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதை­யாம். தந்தை வேடத்­தில் பிர­பு­வும் மக­னாக முகெ­னும் நடித்­துள்­ள­னர்.

"கதைப்­படி முகென் கல்­லூரி மாண­வ­ராக வரு­கி­றார். பொள்­ளாச்சி, பாலக்­கா­டு­தான் கதைக்­க­ளம். 50 ஆண்­டு­க­ளாக நீடிக்­கும் பகை, தந்தை மகன் உறவு, காதல், நட்பு என அனைத்து அம்­சங்­க­ளை­யும் கொண்ட கதை­யாக இப்­ப­டம் உரு­வாகி இருக்­கிறது," என்­கி­றார் இயக்­கு­நர் கவின்.

தயா­ரிப்­பா­ள­ரி­டம் இவர் தெரி­வித்த தொகை­யை­விட தயா­ரிப்பு அதி­கம் செல­வா­கி­விட்­ட­தாம். இருப்­பி­னும் கவின் மீது வைத்­துள்ள நம்­பிக்கை கார­ண­மாக கணக்­குப் பார்க்­கா­மல் செல­விட்­டுள்­ளார் தயா­ரிப்­பா­ளர்.

'சிறுத்தை' சிவா­வி­டம் உதவி இயக்­கு­ந­ராக 'வீரம்' முதல் 'அண்ணாத்த' படம் வரை பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­வர் கவின்.

பள்­ளிப்­ப­டிப்பை முடித்­து­விட்டு கல்­லூ­ரி­யில் சேரும் ஓர் இளை­ஞன்­தான் இவ­ரது கதை­யின் நாய­கன். கதையை உரு­வாக்­கிய சம­யத்­தில்­தான் 'பிக்­பாஸ்' நிகழ்ச்­சி­யில் முகெ­னைப் பார்த்­தா­ராம்.

தன் கதைக்­குப் பொருத்­த­மாக இருப்­பார் என்று தோன்­றி­ய­தால் 'பிக்­பாஸ்' நிகழ்ச்சி முடிந்த கையோடு முகெனை சந்­தித்து கதை சொல்லி உள்­ளார். கதை பிடித்­தி­ருந்­த­தால் அவர் நடிக்க சம்­ம­தித்­தா­ராம்.

"அவ­ருக்­கும் நாயகி மீனாட்­சிக்­கும் கூத்­துப்­பட்­ட­றை­யில் சிறிய பயிற்­சிக்கு ஏற்­பாடு செய்­தோம். முழுக்­க­தை­யை­யும் பல­முறை படித்து தனது கதா­பாத்­தி­ரத்­து­டன் நன்கு பொருந்­தி­விட்­டார் முகென்.

"மேலும் படப்­பி­டிப்பு நடந்த இடத்­துக்கு பத்து நாள்­க­ளுக்கு முன்பே சென்று அங்­கி­ருக்­கும் மக்­க­ளு­டன் பேசிப் பழ­கி­னார்," என்­கி­றார் கவின்.

மலே­சி­யா­வில் பிறந்து வளர்ந்­த­தால் கோவை வட்­டார மொழி­யில் அவ­ரால் பேச முடி­ய­வில்லை. அத­னால் தனது இயல்­புக்­கேற்ப பேசி நடித்­துள்­ளார். சூரி­யு­டன் முதல் நாள் நடித்­த­போது முகென் முகத்­தில் கொஞ்­சம் தயக்­கம் தென்­பட்­ட­தாம். ஆனால். சூரி அதைப் புரிந்­து­கொண்டு அவ­ருக்கு என சில குறிப்­பு­க­ளைக் கூறி, வச­னம் பேசு­வ­தி­லும் உதவி செய்­தா­ராம்.

அதே­போல் உணர்­வு­பூர்­வ­மான காட்­சி­களில் எப்­படி நடிக்­க­வேண்­டும் என்று பிர­பு­வும் தன் பங்­குக்­குச் சொல்­லிக் கொடுத்­துள்­ளார்.

"கடந்த ஆண்டு ஊர­டங்கு முடி­வுக்கு வந்­த­தும் நான் உரு­வாக்கி உள்ள கதை குறித்­தும் 'வேலன்' பட வாய்ப்பு குறித்­தும் இயக்­கு­நர் சிவா சாரி­டம் விப­ரம் தெரி­வித்­த­போது மிக­வும் மகிழ்ச்சி அடைந்­தார்.

"உண்­மை­யாக உழைக்க வேண்­டும், ஒழுக்­கம் முக்­கி­யம் என்­றும் அறி­வுரை கூறி­னார். என் தம்பி நிச்­ச­யம் வெற்றி பெறு­வான் என்று அவர் சொன்­னது இன்­னும் என் காது­களில் ஒலித்­துக் கொண்­டி­ருக்­கிறது. அவ­ரது பெய­ரைக் காப்­பாற்­று­வேன்," என்­கி­றார் இயக்­கு­நர் கவின்.

இப்­ப­டத்­துக்கு கோபி சுந்­தர் இசை­ய­மைத்­துள்­ளார். இவர் 'தோழா' உள்­ளிட்ட பல படங்­க­ளுக்கு இசை­ய­மைத்­த­வர். அண்­மை­யில் தெலுங்­கில் இவர் இசை­ய­மைத்த 'இன்­கேம் இன்­கேம்' பாடல் பலத்த வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

மொத்­தத்­தில் நல்ல குழு­வு­டன் கள­மி­றங்கி இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் கவின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!