அடிதடி நிறைந்த படம் ‘பொன் மாணிக்கவேல்’

இந்­தித் திரை­யு­ல­கில் பர­ப­ரப்­பாக இயங்கி வரு­கி­றார் பிர­பு­தேவா. அங்கு முன்­ன­ணி­யில் உள்ள இயக்கு­நர்­களில் அவ­ரும் ஒரு­வர்.

அதே­ச­ம­யம் தமிழ்ப் படங்­களில் நடிப்­ப­தி­லும் கவ­னம் செலுத்­து­கிறார் பிர­பு­தேவா.

தற்­போது ஏ.சி. முகில் இயக்­கத்­தில் இவர் நடித்து முடித்­துள்ள 'பொன் மாணிக்­க­வேல்' படம் வெளி­யீடு காணத் தயா­ராக உள்­ளது.

இதில் முதன்­மு­றை­யாக பிர­பு­தேவா காவல்­துறை அதி­கா­ரி­யாக நடித்­தி­ருப்­ப­தும் அவ­ரது ஜோடி­யாக நிவேதா பெத்­து­ராஜ் நடித்­தி­ருப்­ப­தும் தெரிந்த சங்­க­தி­கள்­தான். சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்­தி­ரன் உள்­ளிட்ட மேலும் பலர் நடித்­துள்­ள­னர்.

சில மாதங்­க­ளுக்கு முன்பே இப்­ப­டம் வெளி­யாகி இருக்­கக்­கூடும். கொரோனா நெருக்­க­டி­யால் தாம­த­மாகி விட்­டது.

இந்­நி­லை­யில் திரை­ய­ரங்க வெளி­யீட்­டிற்­காக காத்­தி­ருக்­கா­மல் நேர­டி­யாக இணை­யத்­தில் இப்­ப­டத்தை வெளி­யிட தயா­ரிப்­பா­ளர் மேனி­சந்த் ஜபக் முடிவு செய்­துள்­ளார்.

இதை­ய­டுத்து பிர­பல ஓடிடி நிறு­வ­னத்­து­டன் இதற்­கான பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது. எதிர்­பார்த்த பேச்­சு­வார்த்தை வெற்றி பெற்­றதை அடுத்து இப்­ப­டம் விரை­வில் வெளி­யீடு காண்­கிறது.

"டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது அடிதடியும் இதர வணிக அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகி உள்ளது. தேவாவின் ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும்," என்கிறார் இயக்குநர் ஏ.சி. முகில்.

இதற்கிடையே பிரபுதேவா இந்தியில் இயக்கியுள்ள 'ராதே' படமும் இணையத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது. சல்மான் கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

எனவே, தாம் நடித்துள்ள படத்தையும் இணையத்தில் வெளியிட ஆதரவு தெரிவித்துள்ளார் பிரபுதேவா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!