'இந்தியில் பேச வரவில்லை'

'இந்தியில் பேச வரவில்லை'

3 mins read
ed144283-f90e-4204-98d4-958f3c57b483
-

'வட­சென்னை' படத்­தின் இரண்­டாம் பாகத்­தி­லும் நடிக்க விரும்­பு­வ­தாக சொல்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

அதில் ஏற்று நடித்­துள்ள பத்மா கதா­பாத்­தி­ரத்தை தாம் மிக­வும் நேசிப்­ப­தா­க­வும் நல்ல கதை­கள் தமி­ழக கிரா­மங்­க­ளை­யும் சென்­ற­டைய வேண்­டும் என விரும்­பு­வ­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"வட­சென்னை' படத்­தின் இரண்­டாம் பாகம் எப்­போது உரு­வா­கும் எனத் தெரி­ய­வில்லை. இயக்­கு­நர் வெற்­றி­மா­ற­னி­டம்­தான் இது­கு­றித்­துக் கேட்க வேண்­டும். எனி­னும் எப்­போது அதற்­கான வேலை­யைத் தொடங்­கி­னா­லும் கண்­டிப்­பாக என்னை அழைப்­ப­தாக அவர் கூறி இருக்­கி­றார்.

"அசு­ரன்' படத்­தில் ஏன் எனக்கு வாய்ப்­புத் தர­வில்லை என்று கேட்­டேன். என் வய­துக்­கான கதா­பாத்­தி­ரம் அமை­யா­த­தால் அழைக்­க­வில்லை என்­றார். என்னை மதித்து அவர் விளக்­க­ம­ளித்­தது பெரிய விஷ­யம்.

"தனுஷ் சார் தனக்­கென ஒரு ரசி­கர் கூட்­டத்­தைக் கொண்­டி­ருப்பார். 'வட­சென்னை' படத்­தில் எனக்­கான முதல் காட்­சி­யி­லேயே அவரை ஏசு­வது போல் வச­னம் கொடுத்­த­னர். மிக­வும் தயக்­கத்­து­டன்­தான் நடித்­தேன். திரை­ய­ரங்குக்கு சென்று படம் பார்க்­கும்­போது ரசி­கர்­கள் என்னை அடிக்­க­வந்­து­வி­டக்­கூ­டாது என்­று­கூட பயந்­தேன்.

"சொன்­னால் நம்­ப­மாட்­டீர்­கள்... படம் வெளி­யான முதல் நாள் அன்று சென்­னை­யில் உள்ள திரை­ய­ரங்­குக்­குச் சென்­றி­ருந்­தேன். நான் தகாத வார்த்­தை­க­ளைப் பேசி நடித்த காட்­சி­யைத் திரை­யில் கண்­ட­தும் ரசி­கர்­கள் அத்­தனை பேரும் எழுந்து நின்று கைதட்டி ரசித்­த­னர். எனக்­குப் பெரும் அதிர்ச்சி.

"அதே­ச­ம­யம் ரசி­கர்­க­ளின் வர­வேற்­பைக் கண்­ட­தும் மகிழ்ச்­சி­யா­க­வும் இருந்­தது. பத்மா கதா­பாத்­தி­ரத்தை பல­ரும் ரசித்­த­னர்.

"இனி­ உங்­க­ளு­டைய அனைத்­துப் படங்­க­ளி­லும் நான் இருக்க வேண்­டும் என்று வெற்­றி­மா­றன் சாரி­டம் வேண்­டு­கோள் விடுத்­தி­ருக்­கி­றேன்," என்று சொல்­லும் ஐஸ்­வர்யா ராஜேஷ், சில கதை­கள் தமக்­குப் பொருத்­த­மாக இல்லை என்று கரு­தி­னால் வேறு நடி­கை­களைச் சிபா­ரிசு செய்­கி­றார். பெரிய இயக்­கு­நர்­க­ளின் படங்­க­ளில்­கூட தமக்­குப் பதில் பிறரை நடிக்­க­ வைத்­துள்­ளார். இதில் எந்­த­வித தயக்­க­மும் இல்லை என்­கி­றார்.

"ஒரு கதை­யைக் கேட்­கும்­போதே அதில் உள்ள கதா­பாத்­தி­ரத்­து­டன் என்­னைப் பொருத்­திப் பார்ப்­பேன். இப்­ப­டித்­தான் ஒரு பெரிய இயக்­கு­நர் என்­னி­டம் கதை சொன்­ன­போது வேறு ஒரு நடி­கை­யின் பெய­ரைக் குறிப்­பிட்டு அவ­ரைப் பரி­சீ­லிக்­க­லாமே என்று கேட்­டேன்.

"இயக்­கு­ந­ரும் நான் சொன்­னதை ஏற்­றுக்­கொண்டு அந்த நடிகையை நடிக்க வைத்­தார். படத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தது. சில படங்­களில் நடிக்க விரும்­பி­ய­போ­தும் கால்­ஷீட் பிரச்­சி­னை­யால் முடி­யா­மல் போனது.

"தமிழ் சினி­மா­வில் இப்­போது ஆண்ட்­ரியா, வர­லட்­சுமி, மஞ்­சிமா மோகன் என்று பலர் நன்­றா­கத் தமி­ழில் பேசி நடிக்­கி­றார்­கள். சில சம­யங்­களில் அவர்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரம் சரி­யாக அமை­ய­வில்லை என்று தோன்­று­ம். இப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளுக்கு நானும் எனக்கு அவர்­களும் சிபா­ரிசு செய்­வது நல்ல விஷ­யம்­தானே. இந்­தி­யி­லும் நடிக்க விரும்பு­கி­றேன்," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

இவர் நடித்த முதல் இந்­திப் படம் 'டாடி'. இந்­தி­யில் சர­ள­மா­கப் பேச முடி­ய­வில்லை என்று வருத்­தப்­ப­டு­ப­வர் விரை­வில் மொழியை முழு­மை­யாக கற்­றுக்­கொள்ள முடி­யும் என்று நம்­பு­கி­றா­ராம்.

"அண்­மை­யில்­கூட இணைய நிறு­வ­னம் ஒன்­றின் புதுப்­ப­டத்­தில் நடிக்­கக் கேட்டு அணு­கி­னர். சில வச­னங்­க­ளைப் பேசி, நடித்து காணொ­ளிப் பதி­வாக அனுப்­பு­மாறு கூறி­யி­ருந்­த­னர். ஆனால் என்­னால் இந்­தி­யில் சர­ள­மா­கப் பேச­மு­டி­ய­வில்லை. பிறகு மும்­பைக்கே நேரில் சென்று நடிப்புத் தேர்­வில் பங்­கேற்­றேன். 'நீங்­கள் அரு­மை­யாக நடித்­தா­லும் இந்­தி­யில் சர­ள­மா­கப் பேச ­மு­டியாததால்­ வாய்ப்பு அளிக்க முடி­ய­வில்லை' என்­ற­னர். இப்­போ­தைக்கு தென் இந்­திய மொழி­களில் மட்­டுமே கவ­னம் உள்­ளது," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

, :   

ஐஸ்வர்யா ராஜேஷ்