வித்யா: நடிப்பு, ஆராய்ச்சி இரண்டும் வேண்டும்

வித்யா: நடிப்பு, ஆராய்ச்சி இரண்டும் வேண்டும்

2 mins read
20c908a8-9c3e-4e3c-b9a8-b92373422e50
-

கல்­விக்கு மட்­டுமே வாழ்க்­கை­யில் முதன்­மை­யான இடத்­தைக் கொடுக்­க­வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் செயல்­பட்டு வந்த தமக்கு திடீ­ரென திரைப்­ப­டங்­களில் நடிப்­ப­தில் ஆர்­வம் ஏற்­பட்­ட­தாக சொல்­கி­றார் வித்யா பிர­தீப்.

படிப்­பில் கெட்­டிக்­கா­ர­ரான இவர், முனை­வர் பட்­ட­மும் பெற்­றுள்­ளார். 'ஸ்டெம் செல்' தொடர்­பான ஆய்வை மேற்­கொண்ட பிறகு மருத்­து­வத் துறை ஆராய்ச்­சி­யி­லும் ஈடு­பட்­டுள்­ளார்.

முதல் படத்­தி­லேயே கதா­நா­ய­கி­யாக நடித்­தால்­தான் திரை­யு­ல­கில் நிலைத்­தி­ருக்க முடி­யும் என்­ப­தில் தமக்கு நம்­பிக்கை இல்லை என்று குறிப்­பி­டு­ப­வர், பொருத்­த­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தாலே போதும், ரசி­கர்­க­ளி­டம் பெயர் வாங்­க­ மு­டி­யும் என்­கி­றார்.

"நன்­றா­கப் படிக்­க­வேண்­டும், கைநி­றைய சம்­பா­திக்க வேண்­டும் என்­ப­து­தான் வாழ்க்­கை­யில் எனது இலக்­காக இருந்­தது. என் பெற்­றோ­ரும் இதைத்­தான் விரும்­பி­னர். அவர்­க­ளு­டைய விருப்­பத்தை நிறை­வேற்­று­வ­தை­விட நமக்கு வேறு என்ன வேலை என்று முடிவு செய்து உயிர் தொழில்­நுட்­பத் துறை­யில் முதுகலைப் படிப்பை முடித்­தேன்.

"அதன்­பி­றகு ஆராய்ச்சி மேற்­கொண்டு முனை­வர் பட்­ட­மும் வாங்­கிய பிறகு சென்­னை­யில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் இள­நிலை விஞ்­ஞா­னி­யா­கப் பணி­யாற்­றும் வாய்ப்­புக் கிடைத்­தது.

"அப்­போ­து­தான் திடீ­ரென்று விளம்­ப­ரப் படங்­களில் நடிக்­கும் ஆசை மன­தில் துளிர்­விட்­டது," என்­கி­றார் வித்யா பிர­தீப்.

உட­ன­டி­யாக வீட்­டி­லும் அலு­வ­ல­கத்­தி­லும் யாரி­ட­மும் விவ­ரம் சொல்­லா­மல், தம்மை வைத்து நிறைய புகைப்­ப­டங்­கள் எடுத்­துக் கொண்­டா­ராம். அவற்­றைக் கண்ட சில விளம்­பர நிறு­வ­னங்­கள் இவ­ரைத் தங்­க­ளது விளம்­ப­ரங்­களில் நடிக்க வைத்­துள்­ளன.

அவற்­றைப் பார்த்த இயக்­கு­நர் ஏ.எல். விஜய் தனது 'சைவம்' படத்­தில் வித்­யாவை நடிக்க வைத்­துள்­ளார்.

"அவ­ரைச் சந்­திக்­கும்­வரை சினி­மா­வில் நடிக்­கும் எண்­ணம் எனக்கு இல்லை. ஆனால், நேரில் சந்­தித்­த­போது இவ்­வ­ளவு நல்ல மனி­தரா என்று யோசிக்க வைத்­தார் ஏ.எல்.விஜய்.

"அதன் பிறகு 'பசங்க -2', 'அச்­ச­மின்றி', 'இர­வுக்கு ஆயி­ரம் கண்­கள்' என அடுத்­த­டுத்து படங்­களில் நடிக்­கத் தொடங்­கி­னேன்," என்கிறார் வித்யா பிர­தீப்.

தற்­போது 'கண்­ணகி', 'பவு­டர்', 'எக்கோ', 'ஸ்ட்­ரைக்­கர்' உள்­ளிட்ட பல படங்­களில் நடித்து வரு­கி­றா­ராம். குறிப்­பி­டத்­தக்க கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து படிப்­ப­டி­யாக உயர்ந்து இப்­போ­து­தான் கதா­நா­ய­கி­யாக உயர்ந்­துள்­ளார் வித்யா. இந்த படிப்­ப­டி­யான வளர்ச்சி தமக்கு மன­நி­றை­வைத் தந்­தி­ருப்­ப­தா­க­வும் சொல்­கி­றார்.

"மருத்­து­வ­ம­னை­யில் நான் மேற்­கொண்ட ஆராய்ச்­சிப் பணிக்கு மத்­தி­யில் கிடைக்­கும் நேரத்­தைப் பயன்­ப­டுத்தி சினி­மா­வில் நடித்­தேன். சிறி­தாக இருந்­தா­லும், நல்ல கதா­பாத்­தி­ரங்­கள்­தான் வேண்­டும் என்­ப­தில் பிடி­வா­த­மாக இருந்­தேன்.

"நான் ஏற்று நடித்த சில கதா­பாத்­தி­ரங்­கள் குறித்து நண்­பர்­கள் சிலர் விமர்­சித்­த­னர். ஆனால் நல்ல அனு­ப­வம் கிடைக்­கும் என்­ப­தற்­காக அவற்­றில் நடித்­தேன். நான் காட்­டிய பொறு­மை­யும் எனது தேட­லும்­தான் 'தடம்' படத்­தில் கதா­நா­யகி வாய்ப்­பைப் பெற்­றுத் தந்­துள்­ளது.

"இதற்கு முன்பு 'இர­வுக்கு ஆயி­ரம் கண்­கள்' படத்­தில் வில்­லி­யாக நடித்­தேன். மேலும் சண்­டைக் காட்சி­க­ளி­லும் நடித்­துள்­ளேன். அடுத்து நான்கு நாய­கி­களை மைய­மாக வைத்து உரு­வாகி வரும் கண்­ணகி படத்­தி­லும் நடிக்­கி­றேன். முழு­நேர நடி­கை­யா­கி­விட்­டா­லும், கல்வி, ஆராய்ச்­சி­யில் எனக்­குள்ள ஆர்­வம் எப்­போ­தும் போகாது," என்­கி­றார் வித்யா பிர­தீப்.

, :   

வித்யா பிரதீப்