'மண்ணின் இசையும் நிச்சயம் ஒலிக்கும்'

'மண்ணின் இசையும் நிச்சயம் ஒலிக்கும்'

2 mins read
e571d639-ec4a-4039-8f12-451d2f57c90e
'ஜகமே தந்திரம்' படத்தில் தனுஷ், வடிவுக்கரசி. -

'ஜகமே தந்­தி­ரம்' படத்­தில் பணி­யாற்­றி­ய­தன் மூலம் பல விஷ­யங்­களைக் கற்­றுக்­கொள்ள முடிந்­த­தாக இசை­ய­மைப்­பா­ளர் சந்­தோஷ் நாரா­ய­ணன் தெரி­வித்­துள்­ளார்.

இது உலக அள­வில் பய­ணப்­படும் படம் என்­ப­தால் தாம் அதி­கம் மெனக்­கெட்­ட­தாக அவர் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இந்­தப் படத்­துக்கு இசை­யமைக்க அதிக நேரம் கிடைத்­தது. இங்­கி­லாந்து, ஸ்காட்­லாந்து இசைக்­க­லை­ஞர்­கள் மட்­டு­மல்­லா­மல் உல­கின் பல்­வேறு பகு­தி­க­ளைச் சேர்ந்த திற­மை­யான இசைக்­க­லை­ஞர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்றி உள்­ளேன். மேலும், மதுரை நாட்­டுப்­புற இசை­யை­யும் பயன்­ப­டுத்தி உள்­ளேன். இதன்­மூ­லம் இந்­தப் படத்­தின் இசை நம் மக்­க­ளுக்கு அந்­நி­ய­மாக இருக்­கக்­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக இருந்­தேன்," என்று தெரி­வித்­துள்­ளார் சந்­தோஷ் நாராயணன்.

'ஜகமே தந்­தி­ரம்' படப்­பி­டிப்­பிலும் தாம் கலந்­து­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இதன்­மூ­லம் தமது இசை எந்­தக் காட்­சி­க­ளுக்கு எப்­ப­டிப் பொருந்­தும், எது பொருந்­தாது என்­ப­தற்­கு­ரிய தெளிவு ஏற்­பட்­ட­தாக தெரி­வித்­துள்­ளார்.

"இந்த அனு­ப­வம் புது­மை­யாக இருந்­தது. ஓர் இசைக்­க­லை­ஞ­னாக பல­வி­த­மான புதிய முயற்­சி­க­ளுக்கு இப்­ப­டத்­தில் இடம் கிடைத்­தது மகிழ்ச்சி அளிக்­கிறது. 'ரகிட ரகிட' பாடல்­தான் முதன்­மு­றை­யாக எனது ஒலிப்­ப­திவு கூடத்­திற்கு வெளியே பதிவு செய்­யப்­பட்ட ஒரு பாடல்.

"அந்­தப் பாடல் ஓர் அனு­பவ உணர்­வின் வெளிப்­பாடு. ரசி­கர்­களும் அதை உண­ர­வேண்­டும் என நினைத்­தோம். இந்­தப் படத்­தின் ஒவ்­வொரு காட்­சிக்­கும் தேவை­யான மண்­ணின் இசை­யைக் கொண்டு வந்­துள்­ளோம். எனவே, ரசி­கர்­கள் இதைக் கொண்­டா­டு­வார்­கள் என நம்­பு­கி­றேன்.

"ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வுக்­கும் எனது நன்­றி­கள். குறிப்­பாக இயக்கு­நர் கார்த்­திக் சுப்­ப­ரா­ஜுக்கு நன்றி. அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்­றி­ய­போது நூற்­றுக்­க­ணக்­கான புதிய முயற்­சி­க­ளைச் செய்து பார்க்க முடிந்­தது," என்று சந்­தோஷ் நாரா­ய­ணன் தெரி­வித்­துள்­ளார்.

தனுஷ், ஐஸ்­வர்யா லட்­சுமி இணைந்து நடித்­துள்ள இப்­ப­டத்­தில் ஜேம்ஸ் காஸ்மோ, கலை­யரசன், ஜோஜோ ஆகி­யோ­ரும் முக்­கி­யப் பாத்­திங்­களை ஏற்­றுள்­ள­னர்.

வரும் 18ஆம் தேதி இப்­ப­டம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கிறது.

இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­புக்­கும் பாடல்­களுக்­கும் இணை­யத்­தில் நல்ல வர­வேற்பு கிடைத்­தது. திரை­ய­ரங்­கில் வெளி­யிட முடி­யாத சூழல் நில­வு­வ­தால் பெரும் தொகையை முத­லீடு செய்­துள்ள தயா­ரிப்­பா­ளர் இணை­யத்­தில் வெளி­யிட முன்­வந்­துள்­ளார். இத­னால் தனுஷ் மன­வருத்­தத்­தில் இருப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது. எனி­னும் படம் வெளி­யா­வ­தில் தனுஷ் ரசி­கர்­கள் உற்­சா­க­ம­டைந்­துள்­ள­னர்.