பார்வையைத் திருப்பிய கதாநாயகிகள்

பார்வையைத் திருப்பிய கதாநாயகிகள்

2 mins read
0c75d4d9-d4c9-43a5-884b-e17a3f9de469
-

இளம் நடி­கை­கள் முதல் அனு­பவ நாய­கி­கள் வரை பல­ரும் இப்­போது இணை­யத் தொடர்­களில் நடிப்­ப­தில் கவ­னம் செலுத்­தத் தொடங்கி உள்­ள­னர்.

திரைப்­ப­டங்­க­ளை­விட இணை­யத் தொடர்­களில் நடிக்க கூடு­தல் சம்­ப­ளம் கிடைப்­பதே இதற்­குக் கார­ணம். மேலும், சினி­மா­வைப் போல் பல மாதங்­க­ளுக்­குக் கால்­ஷீட் ஒதுக்­க­வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­ப­தும் அலு­வ­ல­கம் செல்­வது போல் காலை 9 மணிக்­குப் படப்­பி­டிப்­புக்­குச் சென்­றால் மாலை 6 மணிக்­குள் வீடு திரும்­பி­விட முடி­யும் என்­ப­தும் நடி­கை­க­ளுக்கு வச­தி­யாக உள்­ளது.

மேலும், சவா­லான கதா­பாத்­தி­ரங்­களும் கதைக்­களங்­களும் அமை­வது கவ­னத்தை ஈர்க்­கும் கூடு­தல் அம்­சங்­கள்.

'தி ஃபேமிலி மேன்-2' இணை­யத் தொட­ரில் நடிக்க சமந்­தா­வுக்கு 3 முதல் 4 கோடி வரை சம்­ப­ளம் கொடுத்­தது அண்­மை­யில் தெரி­ய­வந்­தது. இந்­நி­லை­யில் புதிய இணை­யத் தொட­ரில் நடிக்க அவ­ருக்கு 8 கோடி வரை சம்­ப­ளம் பேசப்­பட்­டுள்­ள­தாக வெளி­யான தக­வல் மற்ற நடி­கை­களை வாய்­பி­ளக்க வைத்­தி­ருக்­கிறது.

திரைப்­ப­டங்­களில் நடிக்க, சமந்தா அதி­க­பட்­ச­மாக பெறும் தொகை ஒன்­றரை கோடி­யாம். ஆண்­டுக்கு மூன்று படங்­களில் நடித்­தால் கிடைக்­கும் தொகையை ஒரு இணை­யத் தொட­ரி­லேயே சம்­பா­தித்­து­விட முடி­யும்.

இதை­ய­டுத்து நடி­கை­கள் திரிஷா, ஷ்ரு­தி­ஹா­சன், அனுஷ்கா, ஹன்­சிகா உள்­ளிட்­டோர் இணை­யத் தொடர்­க­ளின் மீது தங்­கள் பார்­வை­யைத் திருப்பி உள்­ள­னர்.

ஏற்­கெ­னவே காஜல் அகர்­வால், நித்­யா­மேனன், சோனியா அகர்­வால், மீனா, ரம்யா கிருஷ்­ணன் உள்­ளிட்­டோ­ரும் இணை­யத் தொடர்­களில் நடித்து வரு­கின்­ற­னர்.

இவர்­க­ளைத் தவிர நிவேதா தாமஸ், நிவேதா பெத்­து­ராஜ் ஆகி­யோ­ரும் தமிழ் இணை­யத் தொடர்­களில் நடிக்க ஆர்­வம் காட்­டு­வ­தால் முன்­னணி 'ஓடிடி' நிறு­வ­னங்­கள் இணை­யத் தொடர்­கள் தயா­ரிப்­புக்கு என பெருந்­தொ­கையை ஒதுக்க திட்­ட­மிட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.

முதற்­கட்­ட­மாக அந்­நி­று­வ­னங்­கள் ஹன்­சி­காவை தான் கால்­ஷீட் கேட்டு துரத்தி வரு­கின்­ற­ன­வாம். அவ­ரும் சில கதை­களை கேட்­டி­ருப்­ப­தா­கத் தக­வல். எனி­னும் மஹா படம் வெளி­யான பிறகே அவர் இணை­யத் தொடர்­களில் நடிப்­பது குறித்து முடிவு செய்ய உள்­ளார்.

"இணை­யத்­தொ­டர்­க­ள் தயாரிப்பு அதி­க­ரிப்­ப­தால் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும். எனவே, முன்­னணி கலை­ஞர்­கள் இணை­யத் தொடர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டும். அவர்­க­ளால் இந்­தத் தொடர்­களில் பங்­கேற்க இய­லா­விட்­டா­லும் அவற்றை விளம்­ப­ரப்­ப­டுத்­த­வும் ரசி­கர்­க­ளி­டம் கொண்டு சேர்க்­க­வும் உதவி செய்ய முடி­யும்.

"இத­னால் அவர்­க­ளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்­ப­டாது," என்று சொல்கிறார்கள் கோடம்­பாக்­கத்து விவரப்­புள்­ளி­கள்.