திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
e799f444-50d9-4476-8610-d1f2724bbdaf
-
multi-img1 of 2

உருவ கேலி: பிரியாமணி எதிர்ப்பு

உருவ கேலி செய்வதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நடிகைகள் பிரியாமணி, சனுஜா உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளனர்.

திரையுலகில் அறிமுகமானபோது நிறைய சவால்களையும் எதிர்கொண்டு முன்னேறியதாக கூறியுள்ளார் பிரியாமணி.

திருமணத்துக்குப் பிறகும் நடித்துவரும் நிலையில் தமக்கு வயதாகி விட்டது என்றும் கறுப்பாக இருப்பதாகவும் சிலர் விமர்சிப்பது எரிச்சலூட்டுவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

கறுப்பு நிறம், உடல் பருமன் என்றெல்லாம் குறிப்பிடுவது வேதனை அளிக்கிறது. கறுப்பும்கூட அழகுதான். யாரையும் தரம் தாழ்த்திப் பேசக்கூடாது," என்கிறார் பிரியாமணி.

"வாழ்க்கை என்பது ஒருவர் அழகாக இருப்பதற்கு மட்டுமே அல்ல. அதையும் கடந்து பல நல்ல விஷயங்கள் உள்ளன," என்று நடிகை சனுஜாவும் தெரிவித்துள்ளார்.

ரூ.25 லட்சம் அளித்த விஜய் சேதுபதி

தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்புப் பணிக்காக நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கினார் விஜய் சேதுபதி.

தமிழ்த் திரையுலகின் பல முன்னணி நடிகர், நடிகைகள் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை அளித்து வருகின்றனர்.

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் என வழங்கி உள்ளனர்.