'சிவகார்த்திகேயன் மதிப்பு இன்னும் குறையவில்லை'

'சிவகார்த்திகேயன் மதிப்பு இன்னும் குறையவில்லை'

1 mins read
30852361-7a08-43a7-995c-89007e23092e
'அயலான்' படப்பிடிப்பில் இயக்குநர் ரவிகுமார், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன். -

சிவ­கார்த்­தி­கே­யன் நடிப்­பில் வெளி­யான சில படங்­கள் லாபம் பெற்­றுத் தரா­விட்­டா­லும் தயா­ரிப்­பா­ளர்­களுக்கு நஷ்­டம் ஏற்­ப­டுத்­தி­ய­தில்லை.

இந்­நி­லை­யில், அவர் அடுத்து நடிக்­கும் ஐந்து படங்­களை பிர­பல நிறு­வ­னம் தயா­ரிப்­ப­தா­க­வும் இதற்­காக அவ­ருக்கு படத்­துக்கு தலா 15 கோடி ரூபாய் வீதம், மொத்­த­மாக 75 கோடி ரூபாய் சம்­ப­ளம் பேசப்­பட்­டி­ருப்­ப­தாகவும் ஒரு தக­வல் வெளி­யா­னது.

எனி­னும் பெரும் கடன் சுமையில் இருப்­ப­தால்­தான் ஒரு நிறுவனத்­துக்­காக இந்த ஐந்து படங்­க­ளி­லும் நடிக்­கும் ஏற்­பாட்­டுக்கு சிவா ஒப்­புக் கொண்­ட­தா­க­வும் கூறப்­படு­கிறது.

மேலும், சிவா­வின் வியா­பார மதிப்பு குறைந்­து­விட்­ட­தா­க­வும் அண்­மைக் கால­மாக ஒரு தக­வல் கோடம்­பாக்­கத்­தில் உலா வந்­தது. ஆனால் இதற்­கெல்­லாம் அவர் அச­ர­வில்லை. இது தொடர்­பான கேள்­வி­க­ளுக்குப் பதி­லும் அளிக்­க­வில்லை.

இந்­நி­லை­யில், அவர் நடிப்­பில் அடுத்து வெளி­வர உள்ள 'டான்' படத்­தின் தொலைக்­காட்சி உரிமையை முன்­னணி நிறு­வ­னம் ஒன்று வாங்கி உள்­ளது. இதற்­காக கைமா­றிய தொகை 35 கோடி ரூபாய் என்று கூறப்­ப­டு­கிறது.

விஜய், அஜித் போன்ற மூத்த முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­க­ளுக்கு அளிக்­கப்­படும் முக்­கி­யத்­து­வத்­துக்கு இணை­யாக சிவா நடித்­துள்ள படத்­துக்­கும் முன்­னணி நிறு­வ­னம் இவ்­வ­ளவு பெரிய தொகை­யைக் கொடுத்­தி­ருப்­பது கோடம்­பாக்­கத்­தி­னரை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்தி உள்­ளது.

"இதன் மூலம் தன்னைப் பற்றிய வதந்திகள், ஆருடங்களுக்கு சிவா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.