சிங்கப்பூர் திரையரங்குகளில் 'த்ரிஷ்யம் 2'

1 mins read
a2364a16-a02b-4550-9642-f60df20b5a7a
'த்ரிஷ்யம் 2' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. -

'த்ரிஷ்­யம்-2' மலை­யா­ளப் படத்­தின் இரண்­டாம் பாகம் உல­க­ள­வில் முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூர் திரை­ய­ரங்­கு­களில் வலம் வர உள்­ளது.

சினிமா ரசி­கர்­கள் அனை­வ­ரது கவ­னத்­தை­யும் ஈர்த்த படம் 'த்ரிஷ்­யம்'. தமி­ழில் கமல்­ஹா­சன் நடிப்­பில் பாப­நா­சம் என்ற தலைப்­பில் வெளி­யாகி வெற்றி பெற்­றது.

முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இரண்­டாம் பாக­மான 'த்ரிஷ்­யம்-2' தொடங்­கு­கிறது. கொரோனா நெருக்­க­டி­யால் திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்­டதை அடுத்து இணை­யத்­தில் (ஓடிடி தளங்­கள்) வெளி­யீடு கண்டு அனைத்­து­லக அள­வில் வெற்­றி­நடை போட்டு வரு­கிறது 'த்ரிஷ்­யம்-2'.

இந்­தியா உட்­பட இது­வரை உலகில் வேறெந்த நாடு­க­ளி­லும் இப்­ப­டம் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இந்­நி­லை­யில் உல­க­ள­வில் முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூர் திரை­ய­ரங்­கு­களில் இப்­ப­டத்­தைத் திரை­யிட உள்­ள­னர்.

ஆஷிர்­வாட் சினி­மா­ஸு­டன் இணைந்து சிங்­கப்­பூர் கொலி­சி­யம் இப்­ப­டத்தை சிங்­கப்­பூ­ரில் வெளி­யி­டு­கிறது. இம்­மா­தம் 25ஆம் தேதி கோல்­டன் வில்­லேஜ், தெம்பசில் திரை­ய­ரங்­கு­களில் இப்­ப­டம் திரை­யி­டப்­படும்.

ஜீத் ஜோசப் இயக்கி, தென்­னிந்­தி­யா­வின் உச்ச நடி­கர்­களில் ஒரு­வ­ரான மோகன்­லால் நடித்து, அந்­தோணி பெரம்­ப­வூர் தயா­ரித்­தி­ருக்­கும் இப்­ப­டத்­திற்கு உல­க­ள­வில் பெரிய ரசி­கர் பட்­டா­ளமே உள்­ளது. படத்­தின் முத­லாம் பாகம் தமிழ், தெலுங்கு, கன்­ன­டம், இந்தி மொழி­கள் மட்­டு­மின்றி சீன, கொரிய மொழி­க­ளி­லும் மறு­ப­திப்பு செய்­யப்­பட்­டது.